Saturday, July 13, 2024
Home » நாட்டின் சுபிட்சத்துக்காக நாம் இறைவனை வேண்டுவோம்

நாட்டின் சுபிட்சத்துக்காக நாம் இறைவனை வேண்டுவோம்

by damith
June 17, 2024 9:22 am 0 comment

இறைகட்டளைகளுக்கு அடிபணிந்து இன்றைய தினம் தியாகத் திருநாளாம் புனித ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய உறவுகளுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன் என புரவலர் ஹாஷிம் உமர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இப்றாஹீம் (அலை) அவர்களதும் அன்னாரது குடும்பத்தாரினதும் தியாகங்களை இத்தியாகத்திருநாள் எமக்கு நினைவூட்டுகிறது. இந்நிலையில் இந்நெருக்கடியான காலத்தில் நாட்டினதும் சமூகத்தினதும் நன்மைக்காக தன்னுடைய தனிப்பட்ட ஆசைகளை அர்ப்பணித்து மற்றவர்களுடைய தேவைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

எனவே அதனை எமது வாழ்வில் கடைப்பிடித்து நடக்கவேண்டும்.

அத்தோடு சகோதர இனங்களோடு ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் நாம் நடந்து கொள்வதுடன் நாட்டின் சுபிட்சத்துக்காகவும் இன ஐக்கியத்துக்காகவும் அபிவிருத்திக்காகவும் பிரார்த்தனை செய்வதோடு, வீண் களியாட்ட நிகழ்வுகளில் ஈடுபடாது நல்லமல்களில் ஈடுபடுவோம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT