Saturday, July 13, 2024
Home » தியாகங்களுக்கான சிறந்த முன்மாதிரி இப்றாஹீம் (அலை)

தியாகங்களுக்கான சிறந்த முன்மாதிரி இப்றாஹீம் (அலை)

by damith
June 17, 2024 9:20 am 0 comment

இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களினதும் அவர்களது மனைவி மற்றும் குழந்தையினதும் (அலைஹிமஸ்ஸலாம்) தியாகங்களை நினைவுபடுத்தும் முகமாக அல்லாஹு தஆலா இத்திருநாளை எமக்கு அருளியுள்ளான். அக்குடும்பத்தினரின் தியாகங்கள் முழு மனித சமூகத்திற்கும் என்றும் நிலைத்து நிற்கும் ஒரு சிறந்த முன்மாதிரி என்றுள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

உலமா சபை மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அர்ப்பணிப்புகள், தியாகங்களின் ஊடாகவே வாழ்வில் வெற்றியடைய முடியுமென்பதை இஸ்லாம் இதனூடாகப் போதிக்கின்றது. ஏனெனில் தனிமனிதர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் தியாகங்கள் மூலமே ஒரு நாடு வெற்றிகரமான எதிர்காலத்தை அடைய முடியும்.

அதுநேரம் உழ்ஹிய்யாவையும் ஏனைய அமல்களையும் இந்நன்னாளில் நாம் இஸ்லாத்தின் போதனைகளுக்கேற்ப உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும். தியாகத்திருநாள் கற்றுத்தரும் பாடங்களான அல்லாஹ்வின் கட்டளைக்கு முழுமையாக அடிபணிதல், அல்லாஹ்வின் மீதான நேசம், அர்ப்பணிப்பு, தியாகம், பொறுமை, தவக்குல், முன்மாதிரிமிக்க சிறந்த பிள்ளைவளர்ப்பு போன்றவற்றை எமது வாழ்விலும் கடைபிடித்து வாழ்வதோடு எமது குடும்ப உறவுகளிடமும் இவ்வாறான உயர்ந்த பண்புகளை ஏற்படுத்தி ஈருலக வாழ்விலும் வெற்றிபெற முயற்சி செய்வோம்!

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT