Saturday, July 13, 2024
Home » பெருந்தோட்ட நிறுவனங்களின் சக்தி தற்போது மக்கள் சக்தியாக மாறியுள்ளது

பெருந்தோட்ட நிறுவனங்களின் சக்தி தற்போது மக்கள் சக்தியாக மாறியுள்ளது

அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

by damith
June 17, 2024 10:32 am 0 comment

மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு கிடைத்த ரூ.1700 சம்பள வெற்றியின் மூலம் பெருந்தோட்ட நிறுவனங்களின் சக்தி மக்கள் சக்தியாக உருவெடுத்துள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கண்டி, ஹேவாஹெட்ட பிரதேச சபைக்குட்பட்ட பட்டகல கிராம மக்களுக்கு குடிநீர் திட்டத்தை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்து மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். பட்டகல கிராம மக்களின் இடைவிடாமுயற்சியினாலும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஜீவன் தொண்டமானின் நிதி ஒதுக்கீட்டின் ஊடாகவும் இச்செயற்றிட்டம் நிறைவுப் பெற்று மக்களிடம் கையளிக்கப்பட்டது. இக்குடிநீர் திட்டமானது 84 குடும்பங்ளுக்கு பயன்தரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டதுடன் இதற்காக ஒதுக்கப்பட்ட நிதிப்பெறுமதியானது ரூ.6.5 மில்லியனாகவும் குழாய்களுக்கான நிதி ஒதுக்கீடானது ரூ.8.4 மில்லியன் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜீவன் தொண்டமான்,

நாட்டின் ஜனாதிபதி ஊடாக அஸ்வெசும 20 இலட்சம் பேருக்கு காணி உரிமை என்பன கிடைக்கப்பெற்றுள்ளது. எதிர்கட்சியினர் இயலாது, கிடையாது, வேண்டாம் என்ற இந்த மூன்று வார்த்தைகளை மாத்திரம் பிரயோகித்து வருவார்கள். அதனை ஜனாதிபதி அவர்கள் சாதித்து காட்டியிருக்கின்றார்.

தேர்தல் ஒன்று வரும்போது மக்களின் பலம் என்னவென்று மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மக்களிடம் சென்று வாக்கு கேட்பவர்கள் மக்களுக்கு என்ன வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளனர் என அவதானம் செலுத்த வேண்டும்.

நுவரெலியா மாவட்ட மக்களுக்கு அன்மையில் ஒரு பிரச்சினை ஏற்பட்டப்போது நான் அங்கு சென்றேன் அப்போது ஊடக நண்பர்கள் நான் அடாவடி அரசியல் செய்ததாக செய்திகள் ஒளிபரப்பினர். ஆனால் அங்கு மக்களுக்கு நடந்த அநீதிகளை ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை அனுரகுமார திசாநாயக்க கூறியிருந்தார் அடாவடி அரசியலை நாங்கள் ஒருபோதும் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டோம் என கூறினார். தொழிலாளர்களுக்கு குரல் கொடுப்பதாக அடிக்கடி பேசுவார் ஆனால் பெருந்தோட்ட நிறுனங்களுக்கு விலைபோய்விட்டார். நான் ஒருபோதும் பாராளுமன்றத்தை தீ வைப்பேன் என கூறவில்லை ஜனாதிபதி மளிகையை கைப்பற்றுமாறு கூறவில்லை மக்கள் கஷ்டத்தில் இருக்கும் போது நான் போய் டீல் பேசவில்லை நான் ஒருபோதும் மாற்று கட்சியினரை பற்றி பேசியதில்லை மூத்த உறுப்பினர் ஒருவர் மக்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதை விட மக்களுக்கு என்ன செய்தார் என மக்கள் மத்தியில் சென்று சொல்ல வேண்டும்.

எதிர்க்கட்சி தலைவர் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த போவதாக யாழ்ப்பாணத்தில் வைத்து கூறியிருந்தார்.

13ஆவது சீர்திருத்தம் என்பது ஒரு தவறான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தம் என்பது யாழ்ப்பாண மக்களுக்கு மாத்திரமல்ல நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் அது எந்த சட்டமாக இருந்தாலும் மக்களுடைய ஆணையின் கீழ் கொண்டுவரப்படும் என அவர் தெரிவித்தார்.

பொகவந்தலாவ நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT