Saturday, July 13, 2024
Home » பால்நிலை வன்முறை; யாழில் கலந்துரையாடல்

பால்நிலை வன்முறை; யாழில் கலந்துரையாடல்

by damith
June 17, 2024 9:31 am 0 comment

“பால் மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பான முறைப்பாட்டு முறைமைகள், அடையாளப்படுத்தப்பட்ட சேவை வழங்குநர் மற்றும் மாவட்ட பரிந்துரை வலையமைப்பு” எனும் தலைப்பிலான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை யாழ்.மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

ஐரோப்பிய ஒன்றிய நிதியுதவியில், இலங்கையின் வடக்கு மாகாணத்தில், கிறிசலிஸ் நிறுவனம் நடைமுைறப்படுத்தும் “பெண்கள் தலைமையிலான ஒன்றிணைந்த மன்றங்களினூடாக அமைதி மற்றும் உள்ளடங்கலான தாங்குதிறன் மிக்க சமூகங்களை மேம்படுத்தல்”எனும் கருத்திட்டத்தின் ஓர் அம்சமாக மேற்படி பயிற்சிப்பட்டறை இடம்பெற்றிருந்தது.

இதில் யாழ் மாவட்ட அரச அதிபர், உதவி அரச அதிபர், வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர், மாவட்ட மகளிர் அபிவிருத்தி அலுவலர், மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர், மனித உரிமை ஆணைகுழுவின் பிரதிநிதி உட்பட பல்துறை சார் அரச அலுவலர்கள் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் கிறிசலிஸ் நிறுவன அலுவலர்கள், யாழ் மாவட்டத்தில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவங்களின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள், யாழ் குடிசார் சம்மேளன பிரதிநிதிகள், மனித உரிமை பாதுகாவலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் என, தெரிவு செய்யப்பட்ட 35 பேர் கலந்து கொண்டு பால் மற்றும் பால்நிலை வன்முறை தொடர்பாக கலந்துரையாடி அவற்றுக்கான தீர்வுகளையும் அடையாளப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சாவகச்சேரி விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT