Monday, July 22, 2024
Home » பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த சாதனை வீரன் ஹசன் ஸலாமா

பாக்கு நீரிணையை நீந்திக் கடந்த சாதனை வீரன் ஹசன் ஸலாமா

மூன்று மாதகால தீவிர பயிற்சியின் பயனை அறுவடை செய்துள்ளார்

by damith
June 17, 2024 10:28 am 0 comment

திருகோணமலையை சேர்ந்த முஹம்மட் ஹசன் ஸலாமா நேற்று முன்தினம் சனிக்கிழமை (15) இந்தியாவின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கிடையிலான 42 கி.மீ நீளத்தைக் கொண்ட பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை (15) அதிகாலை 02.00 மணிக்கு தனது நீச்சல் பயணத்தை ஆரம்பித்த அவர், முற்பகல் 11.00 மணியளவில் நீந்தி முடித்துள்ளார்.

பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த இலங்­கையின் எட்­டா­வது நப­ரா­கவும், பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த உலகின் முத­லா­வது முஸ்லிமாகவும் ஹசன் ஸலாமா திகழ்கிறார். தரம் 10இல் கல்வி கற்கும் 15 வய­தான இவர் கடந்த மூன்று மாதங்­க­ளாக இச் சாதனை முயற்­சிக்­கான தீவிர பயிற்­சியில் ஈடு­பட்டு வந்தார்.

கடந்த மாதம் 18ஆம் திகதி இவர் பாக்கு நீரி­ணையின் இலங்கை கடல் எல்லையில் இருந்து தலை­மன்னார் வரை­யான தூரத்தை பயிற்சி அடிப்­ப­டையில் நீந்திக் கடந்­துள்ளார். இவ­ருக்­கான நீச்சல் பயிற்­சி­களை விமா­னப்­படை கோப்ரல் றொசான் அபே­சுந்­தர வழங்கி வரு­கின்றார்.

இரண்டு மாதங்­க­ளுக்கு முன்னர் பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த திரு­கோ­ண­ம­லையைச் சேர்ந்த ஹரி­கரன் தன்­வந்­தை­யையும் இவரே பயிற்­று­வித்­தி­ருந்தார். திரு­கோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சுற்­றுலா பணி­ய­கத்­தினால் நடத்­தப்­பட்ட அகில இலங்கை கடல் நீச்சல் போட்­டியில் வெற்­றி­யா­ள­ராகவும் சலாமா தெரிவாகியுள்ளார்.

ஹசன் ஸலாமா, விளையாட்டுத்துறையிலான ஈடுபாட்டுக்கு அப்பால் கடற்பாதுகாப்பு தொடர்பாகவும் தனது நேரடி பங்களிப்பினை வழங்குபவர்.

மன்னார் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT