Thursday, July 18, 2024
Home » பத்தாவது ஆண்டில் கால்பதிக்கும் மலையக கலாசார ஒன்றியம்

பத்தாவது ஆண்டில் கால்பதிக்கும் மலையக கலாசார ஒன்றியம்

by damith
June 17, 2024 12:44 pm 0 comment

மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஐந்து இளைஞர்கள் ஒன்று கூடி தாங்கள் பிறந்த பிரதேசத்திற்கு சேவை செய்யும் முகமாக ‘கல்விக்கு முதலிடம்’ என்ற கருப்பொருளில் மலையக மாணவ மாணவிகளின் முன்னேற்றத்திற்காக ‘மலையக கலாசார ஒன்றியம்’ என்ற பெயரில்,அமைப்பினை உருவாக்கி பல்வேறுபட்ட சேவைகளை செய்து வருகின்றனர்.

குறிப்பாக இலவசக் கல்விக் கருத்தரங்குகள், ஊடக சேவைகள், பரிசளிப்பு விழாக்கள், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு உணவுப் பொதிகள் மற்றும் பொருட்கள் வழங்குதல், பாடசாலை விழாக்கள் சிலவற்றை முன்னின்று செயற்படுத்தல் போன்ற பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர்.

மலையக கலாசார ஒன்றியம் பல்வேறுபட்ட தனியார் சமூக அமைப்புகளுடன் இணைந்து சேவைகளை செய்து கொண்டு வருகின்றது. அவற்றில் குறிப்பாக ஆஞ்சநேயர் தேவாலயம், lions club 306 B2 Ocean city, Ideal academy, Lanka children’s Foundation, உயிர் நேயம் உதவும் கரங்கள், vishvam campus ccem campus, இரத்தினபுரி உதவும் கரங்கள் போன்ற அமைப்புகளுடன் இணைந்து சேவைகளை முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வமைமைப்பின் வளர்ச்சிக்காக மன்றத்தின் தலைவர் K.J. சிவராஜேஸ்வரன் மற்றும் உறுப்பினர்கள், அனுசரணையாளர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் போன்றவர்களின் ஒத்தாசைகள் பாராட்டத்தக்கவையாகும்.

தலைவராக K.J. சிவராஜேஸ்வரன், செயலாளராக ரகு இந்திரகுமார், பொருளாளராக S. விக்னேஸ்வரன், உபதலைவர்களாக. R.செல்வகுமார், P.விஜயக்குமார் ஆகியோரும், சட்ட விவகார ஆலோசகராக R .பிரணவா, ஊடக ஆலோசகராக A. அஜித்குமார், போசகராக Lion K.S. மனோகரன், K.சதீஷ் P.பாலகிருஷ்ணன், நிர்வாக குழு ஆலோசகர்களா P.சேதுராமன், R.S.சுபாஷ், மாணவப் பிரிவுப் பொருப்பாளராக S.சஞ்ஜீவன், நிர்வாக குழு உறுப்பினர்களாக முருகன், மகளிர் அணியின் நிர்வாக குழு உறுப்பினர்களாக திருமதி யோகலட்சுமி, திருமதி.யோகராணி, திருமதி உமாதேவி, திருமதி லாலனி போன்றோர் செயற்படுகிறார்கள்.

பத்தாண்டு கால சேவையில் கால்பதிக்கும் மலையக கலாசார ஒன்றியம் தமக்கு உதவி ஒத்தாசை வழங்கிய அனைவருக்கும் மலையக கலாசார ஒன்றியத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது. மேலும் அதன் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளனர்.

மருதமுத்து நவநீதன் (புசல்லாவை தினகரன் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT