Monday, July 22, 2024
Home » தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகை இவானா

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகை இவானா

by damith
June 17, 2024 10:42 am 0 comment

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகளில் ஒருவராக வளர்ந்து வருபவர் தான் நடிகை இவானா. கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஆன இவர் மலையாள திரைப்படங்களில் முதன்முதலில் நடிக்க ஆரம்பித்தார்.

அதன் பிறகு தமிழ் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க குறுகிய காலத்திலே தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் இவானா.

வெறும் 24 வயது ஆகும் இவானா மிகவும் இளம் வயதிலேயே பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முதன் முதலில் தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களுள் ஒருவரான பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த “நாச்சியார்” திரைப்படத்தில் தான் இவானா நடித்திருந்தார் .

அந்த திரைப்படத்தில் முக்கிய தோற்றத்தில் நடித்திருந்தார் . அந்த திரைப்படத்தின் கதாநாயகி ஜோதிகா தான் என்றாலும் இவானாவின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது .

அவ்வளவு ஏன் ஜோதிகாவே மேடையில் இவானா தான் இப்படத்தின் ஹீரோயின் என்ற அளவுக்கு அவரின் நடிப்பை புகழ்ந்து பாராட்டி தள்ளி இருந்தார்.

முதல் படமே அவருக்கு வேற லெவலில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்ததால் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது .

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT