Saturday, July 13, 2024
Home » புனித ஹஜ் யாத்திரைக்கு சென்ற 06 பேர் உயிரிழப்பு
சவூதியில் அதிகளவு உஷ்ணம்

புனித ஹஜ் யாத்திரைக்கு சென்ற 06 பேர் உயிரிழப்பு

by damith
June 17, 2024 9:45 am 0 comment

புனித ஹஜ் யாத்திரையில் கலந்துகொண்டவர்களுள் 06 பேர் அதிக உஷ்ணம் காரணமான உயிரிழந்துள்ளனர். உஷ்ண அதிகரிப்பு தொடர்பில் இம்முறை முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறான சூழ்நிலையிலேயே அங்கு ஒன்று கூடிய யாத்திரிகளில் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸை (118 டிகிரி பாரன்ஹீட்) எட்டக்கூடுமென்று சவுதி அதிகாரிகள் எச்சரித்திருந்தாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இறந்த ஆறு பேரும் ஜோர்தான் நாட்டவர்கள் என்று ஜோர்தான் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு சனிக்கிழமை தெரிவித்தது.

ஹஜ் யாத்திகர்கள் அரஃபா மலைப்பகுதியில் சனியன்று திரண்டிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த ஆண்டு 1.8 மில்லியனுக்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் புனித ஹஜ் கடமைகளை நிறைவேற்றுவதற்காக பங்கேற்கின்றனர் என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT