Saturday, July 13, 2024
Home » கட்டட நிர்மாணத்துறைக்குரிய மூலப்பொருளின் விலை வீழ்ச்சி

கட்டட நிர்மாணத்துறைக்குரிய மூலப்பொருளின் விலை வீழ்ச்சி

மீண்டும் பணிகளை ஆரம்பிக்கலாம் நிர்மாணத்துறை சங்கம் வேண்டுகோள்

by damith
June 17, 2024 9:30 am 0 comment

சீமெந்து, கம்பி உட்பட கட்டட நிர்மாணத் துறை நடவடிக்கைகளுக்கான மூலப் பொருட்களின் விலைகள் வீழ்ச்சி யடைந்துள்ளதால் மீண்டும் தமது பணிகளை ஆரம்பிக்கலாமென நிர்மாணத்துறை ஊழியர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி, இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி உள்ளிட்ட மேலும் பல்வேறு நெருக்கடிகள் காரணமாக நிர்மாணத்துறைக்கான பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்தாக அந்த சங்கத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது நாட்டின் பொருளாதாரம் வழமை நிலைக்கு திரும்பிக்கொண்டிருப்பதால் மேற்படி பொருட்களுக்கான விலைகள் குறைவடைந்து வருவதாகவும் தேசிய நிர்மாணத்துறை ஊழியர்கள் சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

கடந்த காலங்களில் பல்வேறு காரணங்களுக்காக நிர்மாணத்துறை நடவடிக்கைகள் முழுமையாக வீழ்ச்சியடைந்தன.

இந்நிலை மாற்றமடைந்து தற்போது அந்த துறையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் சீமெந்து கம்பி பூச்சு (வர்ணம்) உள்ளிட்ட மூலப் பொருட்களின் விலைகள் குறைவடைந்து வருகின்றன. இது மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

அதேவேளை, வங்கி கடன்களுக்கான வட்டி வீதமும் குறைவடைந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் வங்கிக் கடனை பெற்றுக் கொண்டு வீடுகளை நிர்மாணிக்கும் அல்லது பல்வேறு நிர்மாணப் பணிகளையும் மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT