Saturday, July 13, 2024
Home » புதியவர்களுக்கு வாய்ப்பை வழங்கி மீண்டும் நெருக்கடிக்குள் விழுவதா?

புதியவர்களுக்கு வாய்ப்பை வழங்கி மீண்டும் நெருக்கடிக்குள் விழுவதா?

மக்களே தீர்மானிக்க வேண்டும் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

by damith
June 17, 2024 9:15 am 0 comment

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதார வேலைத் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றால் மாத்திரமே பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியும் என்பதை ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் ஏற்றுக் கொண்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இத்தகைய பின்னணியில் ஜனாதிபதித் தேர்தலில் வாய்ப்பை வழங்கிப் பார்ப்பது என செயற்பட்டு மீண்டும் நெருக்கடிக்குள் விழுவதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்தால் மாத்திரமே தொங்கு பாலத்தின் ஊடாக அக்கரைக்கு செல்ல முடியும் என தெரிவித்துள்ள அமைச்சர் அதற்கு புதிதாக எவரும் அவசியம் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார். அந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்கினால் மாத்திரமே பொருளாதார நெருக்கடியிலிருந்து முழுமையாக நாட்டை மீட்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மினுவாங்கொடை பகுதியில் நேற்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT