Saturday, July 13, 2024
Home » IMF உடன் அரசு செய்துகொண்ட ஒப்பந்தம் திருத்தம் செய்யப்படும்
ஐக்கிய மக்கள் சக்தி அரசின் கீழ்

IMF உடன் அரசு செய்துகொண்ட ஒப்பந்தம் திருத்தம் செய்யப்படும்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

by damith
June 17, 2024 8:00 am 0 comment

தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொண்டுள்ள உடன்படிக்கை தமது அரசாங்கத்தின் கீழ் திருத்தியமைக்கப்படுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கம்பஹா திவுலப்பிட்டிய ஹுனமுல்ல மகா வித்தியாலயத்துக்கு சுஹுரு ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்கும் நிகழ்வில் (14) கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நாட்களில் சில அரசியல் கட்சிகள் IMF இல்லாமல் செயல்படுவதாக கூறி வருகின்றன. இந்த முட்டாள்தனமான கதையை கேட்டு மக்கள் ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உலகப் பொருளாதாரம் மற்றும் வர்த்தக முறை இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட சர்வதேச நிதிச் சட்ட கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது.

IMF, World Bank, GAT, WTO போன்றவற்றின் மூலம் உலகப் பொருளாதார முறை உருவாக்கப்பட்டது. சர்வதேச நாணய நிதியம் இல்லாமலேயே இந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியுமென எவரேனும் முட்டாள்தனமான வாதத்தை முன்வைத்தால் அது உலகிலுள்ள சிறந்த நகைச்சுவை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை மக்களுக்குச் சாதகமாக, மாற்றுவதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும். இன்று அப்படி எதுவும் நடக்கவில்லை. மக்களின் துன்பங்களுக்கு முன்னுரிமை அளித்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவில்லை.

இந்த ஒப்பந்தம் மண்ணில் கால் பதிக்காமல் வானத்தில் இருந்து அரசும் ஆட்சியாளர்களும் கையெழுத்திட்ட ஜனரஞ்சகமற்ற ஒப்பந்தம். மேலும், நமது ஆட்சியில் அது திருத்தம் செய்யப்படும் என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT