Saturday, July 20, 2024
Home » யானை – மனித மோதலால் 45 பேர் உயிரிழப்பு

யானை – மனித மோதலால் 45 பேர் உயிரிழப்பு

by gayan
June 15, 2024 2:22 am 0 comment

வன விலங்குகளுக்கும் மனிதர்களுக்குமிடையே அதிகரித்து வரும் முரண்பாடுகளினால் இந்த வருடத்தின் கடந்த ஐந்து மாதங்களில் 150 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 28 யானைகளும், மின்சாரம் தாக்கி 21 யானைகளும், ஹக்க பட்டாசுகளினால் 13 யானைகளும், நஞ்சூட்டப்பட்டதால் 02 யானைகளும், ரயில் விபத்துகளால் 03 யானைகளும், வீதி விபத்தினால் ஒரு யானையும், நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவங்களால் 07 யானைகளும், ஏனைய விபத்துகளால் 04 யானைகளும் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

யானைகளில் பெரும்பாலானவை இள வயதிலேயே உயிரிழந்துள்ளன.

இதேவேளை அதிகரித்து வரும் யானை – மனிதன் மோதல்களால் 45 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 2023ஆம் ஆண்டு யானை – மனித மோதல் காரணமாக 488 யானைகள் உயிரிழந்துள்ளன.

184 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT