Monday, July 22, 2024
Home » இத்தாலிக்குச் சென்ற இந்திய பிரதமருக்கு பெருவரவேற்பு

இத்தாலிக்குச் சென்ற இந்திய பிரதமருக்கு பெருவரவேற்பு

by gayan
June 15, 2024 8:33 am 0 comment

‘ஜி – 7’ மாநாட்டில் பங்கேற்பதற்காக இத்தாலி சென்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் எரிசக்தி, ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆபிரிக்க விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளதாக மோடி தெரிவித்தார்.

ஜி – 7 நாடுகளின் உச்சி மாநாடு இத்தாலியின் பஷானோ நகரில் உள்ள அபுலியாவில் 13ம் திகதி தொடங்கி 15-ம் திகதி வரை நடக்கிறது. இந்த மாநாட்டில் ரஷ்யா – உக்ரைன் போர், இஸ்ரேல் -காசா போர் ஆகியவை முக்கிய விவாதப் பொருளாக இருக்கும்.

இந்நிலையில் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள மோடி, தன் முதல் வெளிநாட்டு பயணமாக நேற்றுமுன்தினம் இத்தாலி புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற ஜி – 7 கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பின் பேரில் இத்தாலியில் நடக்கும் ஜி – 7 உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்கிறார். கடந்த ஆண்டில் இத்தாலி பிரதமர் மெலோனி இருமுறை இந்தியா வந்திருந்தார். அந்த பயணம் இரு தரப்பு நாடுகளின் திட்டங்களை வேகப்படுத்தின. இந்தியா- – இத்தாலியின் உறவை பலப்படுத்துவதிலும், இந்தோ- பசிபிக் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் இரு தலைவர்களும் உறுதியாக உள்ளனர். உச்சி மாநாட்டில் பங்கேற்கும் மற்ற தலைவர்களையும் மோடி சந்தித்தார்.

ஜி – 7 மாநாட்டின் கலந்துரையாடலின் போது, செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, ஆபிரிக்கா மற்றும் மத்திய தரைக்கடல் விவகாரங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT