Saturday, July 20, 2024
Home » எத்தலவெட்டுனுவேவ முஸ்லிம் ம.வியில் குவைத் நிதியுதவியில் புதிய கட்டடம்

எத்தலவெட்டுனுவேவ முஸ்லிம் ம.வியில் குவைத் நிதியுதவியில் புதிய கட்டடம்

by gayan
June 15, 2024 6:15 am 0 comment

குவைத் அரசாங்கத்தின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் அல் ஹிமா இஸ்லாமிய சேவிஸ் திட்டத்தின் கீழ் பௌதீக வளம் குறைந்த பாடசாலைகளுக்கு வகுப்பறைக் கட்டடங்களை நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் அநுராதபுரம் , எத்தலவெட்டுனுவேவ முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தில் 4 வகுப்பறைகளைக் கொண்ட முதலாது மாடி விமர்சையாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணர் இசாக் ஏ ரஹ்மான் மற்றும் குவைத் துாதுவரின் பிரநிதியாக இலங்கையின் குவைத் துாதுவர் அலுவலக அதிகாரி அஷ்ஷேக் எம் .பிர்தௌஸ் நளிமி, அல் ஹிமா இஸ்லாமிய சேவிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம். ஏ நுாறுல்லாஹ் நளிமி, உபதலைவர் ஏ.ஆர்.எம். அமினுடீன், கல்லூரி அதிபர் ஏ.சி.அமீன் மற்றும் உதவிப் கல்விப் பணிப்பாளர் எம்.நவாஸ், பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் பெருமளவில் கலந்து சிற்பித்தனர்.

குவைத் அரசாங்கம் இலங்கையின் பின்தங்கிய பிரதேசத்தில் 40 க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் இவ்வாறாக வகுப்பறைக் கட்டடங்களை நிர்மாணித்துள்ளது. குவைத் அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து இலங்கையில் உள்ள மாணவர்கள் கல்வியில் முன்னேறி வாழ்வதற்காக கடந்த பத்து வருடங்களாக இலங்கைக்கு உதவி வருகிறது.

இத்திட்டத்தினை அநுராதபுரம் மாவட்டத்தில் பின்தங்கிய பாடசாலைகளுக்கு பெற்றுத் தருமாறும் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இசாக் ஏ ரஹ்மான் குவைத் துாதுவரிடம் கோரிக்கை விடுத்தாகவும் பணிப்பாளர் நுாறுள்ளாஹ் மொளலவி தெரிவித்தார்.

இப்பாடசாலையின் ஏனைய குறைபாடுகளை பாராளுமன்ற உறுப்பினர் உடன் நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தார். இப்பாடசாலையில் கல்வி கற்ற உயர் தர மாணவர்கள் மூவர் 3 ஏ சித்தியடைந்ததை அதிதிகள் பாராட்டினார்கள்.

அஷ்ரப் ஏ சமத்…?

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT