Saturday, July 20, 2024
Home » தியாக வரலாறுகளை நினைவுகூரும் இறுதிக் கடமை ஹஜ்

தியாக வரலாறுகளை நினைவுகூரும் இறுதிக் கடமை ஹஜ்

by gayan
June 15, 2024 6:00 am 0 comment

முஸ்லிம்கள் வருடத்தில் இரு பெருநாட்களைக் கொண்டாடுகிறார்கள். இஸ்லாமிய வருடத்தில் பத்தாவது மாதமாக விளங்கும் ஷவ்வால் தலைப்பிறையன்று, ஈதுல் பித்ர் எனும் ஈகைப் பெருநாள் அனுஷ்டிக்கப்படுகிறது. இது இத்தினத்துக்கு முதல் மாதமாகத் திகழும் ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று அல்லாஹ்வின் ஆணையை நிறைவேற்றி விட்டோம் என்ற களிப்பின் வெளிப்பாடாகவும் கொண்டாடப்படுகிறது.

அடுத்தது ஈதுல் அழ்ஹாவெனும் தியாகப் பெருநாளாகும். இஸ்லாமிய ஆண்டின் இறுதி மாதமான துல்ஹஜ் பிறை பத்தாம் நாள் இப்பெருநாள் கொண்டாடப்படுகிறது.

இஸ்லாம் விதியாக்கியுள்ள ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமையாக சர்வதேச மட்டத்தில் முஸ்லிம்கள் ஓரிடம் திரண்டு மேற்கொள்ளும் வணக்க வழிபாடாக ஹஜ் கடமை அமைகிறது. இப்ராஹீம் (அலை) அவர்களின் வாழ்க்கையில் இடம்பெற்ற மாபெரும் தியாக வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் இப்பெருநாள் அனுஷ்டிக்கப்படுகிறது.

தியாகத்தின் உச்ச- அதி உச்சகட்ட செயற்பாடான நிகழ்வுகளை ஹஜ் கடமையை நிறைவேற்றும் ஹாஜிகள் அதே இடத்திற்குச் சென்று, அதே பாணியில், நினைவு கூரும் வணக்க வழிபாடாக ஹஜ் கடமை அமையப் பெற்றிருக்கிறது.

அத்துடன் சர்வதேச ரீதியான சமத்துவ, சகோதரத்துவ பண்பாட்டின் அதி உச்சகட்ட வெளிப்பாட்டையும் ஹஜ்ஜின் போது காணலாம்.

அரசனும் ஆண்டியும் சரிசமமாக மிகவும் எளிமையான வெண்ணுடையில் அவர்கள் காட்சியளிப்பர். அது இஹ்ராம் உடை என அழைக்கப்படுகிறது. அவ்வாறான கண்கொள்ளாக் காட்சியை மக்காவில் காணலாம்.

உலகில் உன்னத நிலையில் வாழ மனிதனை புடம் போடும் வணக்க வழிபாடுகளுடன் கூடிய ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம் இஸ்லாம் என்பதை அதன் ஐம்பெரும் கடமைகள் உணர்த்தி நிற்பதை காணலாம். அந்த வகையிலே இறுதிக் கடமை ஹஜ்ஜும் அமையப்பெற்றிருக்கிறது. அது அகில உலக முஸ்லிம்களது சர்வதேச மாநாடா கவும் விளங்குகிறது.

பேருவளை பீ.எம். முக்தார்-…?

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT