Saturday, July 20, 2024
Home » மே. தீவுகள் மகளிர் அணியை 6 விக்கெட்டுகளால் வென்றது இலங்கை

மே. தீவுகள் மகளிர் அணியை 6 விக்கெட்டுகளால் வென்றது இலங்கை

by Prashahini
June 15, 2024 11:52 pm 0 comment

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இலங்கை மகளிர் அணி 6 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றுள்ளது.

ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஆரம்பமான இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 47.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 197 ஓட்டங்களை பெற்றது. சுகந்திகா குமாரி மற்றும் கவிஸா தில்ஹாரி ஆகியோர் தலா 3 விக்கட்டுக்களை வீழ்த்தினர்.

198 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 34.1 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து இலக்கையடைந்தது. ஹர்சித்தா சமரவிக்ரம ஆட்டமிழக்காது 44 ஓட்டங்களையும் , விஸ்மி குணரத்ன 40 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT