Saturday, July 20, 2024
Home » இலங்கையின் சுற்றுலாத் தலங்களில் யோகா

இலங்கையின் சுற்றுலாத் தலங்களில் யோகா

- 10ஆவது யோகா தினத்தையிட்டு இந்திய உயர் ஸ்தானிகராலயம் முன்னெடுப்பு

by Rizwan Segu Mohideen
June 15, 2024 12:49 pm 0 comment

10ஆவது சர்வதேச யோகா தினத்தையிட்டு, இந்திய உயர் ஸ்தானிகராலயம் இலங்கை சுற்றுலா அமைச்சுடன் இணைந்து 10 நாள் யோகா மஹோற்சவ விழாவை முன்னெடுத்துள்ளது.

இலங்கையில் உள்ள சுற்றுலா தலங்களின் பின்னணியில் இடம்பெறும் இந்த யோகா நிகழ்வுகள் இலங்கையின் சுற்றுலாவை பிரபலபடுத்துவதோடு மட்டுமல்லாது, யோகாவின் ஆற்றலை காண்பிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இலங்கையின் சிகிரியா, நெடுந்தீவு, மாத்தறை கடற்கரை, காலி கோட்டை, கொழும்பு தேசிய அருங்காட்சியகம், திருகோணமலை மெக் ஹெய்சர் மைதானம், தெவுந்தர கலங்கரை விளக்கம் போன்ற இடங்களில் யோகா ஆர்வலர்கள் குழுவானது யோகாவில் ஈடுபடுவதை நோக்காகக் கொண்டு இந்த நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT