Saturday, July 20, 2024
Home » மலேசியாவில் சாரணர் மாவட்ட ஆணையாளர் மாநாடு ஏற்பாடு
19ஆம் திகதி முதல் 24ஆம் திகதிவரை

மலேசியாவில் சாரணர் மாவட்ட ஆணையாளர் மாநாடு ஏற்பாடு

சாரணர் தலைமையகத்தில் பாராட்டு விழா

by gayan
June 15, 2024 3:30 am 0 comment

மலேசியாவில் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 24ஆம் திகதிவரை நடைபெறவுள்ள மாவட்ட ஆணையாளர் மாநாட்டுக்கான பாராட்டு விழா (12) கொழும்பிலுள்ள சாரணர் தலைமையகத்தில் நடைபெற்றது.

மலேசிய உயர்ஸ்தானிகர் பட்லி ஹிஷாம் பில் அதாமி மற்றும் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் தாரிக் அரிபுல் இஸ்லாம் ஆகியோர் நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.

ஆணையர்களின் அறிவு மற்றும் திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் தலைமையக ஆணையர், 54 மாவட்ட ஆணையர்கள் பங்கேற்கவுள்ளனர்.

பிரதம சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி ஜனப்ரித் பெர்னாண்டோவின் கருத்தின் அடிப்படையில் இந்த மாநாடு நடைபெறுவதுடன், 02ஆவது தடவையாக மலேசியாவில் நடைபெறவுள்ளது.

பங்களாதேஷில் நடைபெறவுள்ள இளைஞர் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள மாணவ சாரணர்களுக்கும் இங்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT