Saturday, July 20, 2024
Home » கொடுப்பனவுகளை அதிகரிக்க பொலிஸ் மாஅதிபர் பணிப்பு

கொடுப்பனவுகளை அதிகரிக்க பொலிஸ் மாஅதிபர் பணிப்பு

போக்குவரத்து பொலிஸாரின்

by gayan
June 15, 2024 3:00 am 0 comment

நெடுஞ்சாலை போக்குவரத்து கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் போக்குவரத்து திணைக்கள உத்தியோகத்தர்களின் மாதாந்த கொடுப்பனவை அதிகரித்து புதிய சுற்றறிக்கையை வெளியிட பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி தற்போதுள்ள ஒருவரின் மாதாந்த கொடுப்பனவான 1,600 ரூபாவை 6,000 ரூபாவாக அதிகரிக்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவான 1,800 ரூபா 6,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பரிசோதகர் தர உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 2,000 ரூபா கொடுப்பனவு 7,000 ரூபாவாகவும், பொலிஸ் போக்குவரத்து நிலைய அதிகாரிக்கு வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவு 7,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போக்குவரத்து கடமையில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகளை மதிப்பீடு செய்து ஊக்குவிப்பதன் மூலம் திறமையான மற்றும் தரமான சேவையை பெற எதிர்பார்க்கப்படுகிறது.

வெய்யில், மழை உள்ளிட்ட இடையூறுகளுக்கு மத்தியில் சாலைகளில் சுமார் பன்னிரெண்டு மணிநேரம் போக்குவரத்தை கையாள்வது கடினமான பணி என்பதாலும், வாகனப் புகை உள்ளிட்ட நச்சுகளை சுவாசிப்பதால் அதிகமானோர் சுவாசக் கோளாறால் அவதிப்படுவதாலும், இந்தக் கொடுப்பனவை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது முதல், இரண்டாம், மூன்றாம் பிரிவுகளின் கீழ் பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகையும் அதற்கேற்ப மாற்றப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை முதல் பிரிவில் 104 பொலிஸ் நிலையங்களும், இரண்டாம் பிரிவில் 59 பொலிஸ் நிலையங்களும், மூன்றாம் பிரிவில் 444 பொலிஸ் நிலையங்களும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT