Saturday, July 20, 2024
Home » அவுஸ்திரேலியா வீஸா விதிகளை கடுமையாக்குவதாக அறிவிப்பு

அவுஸ்திரேலியா வீஸா விதிகளை கடுமையாக்குவதாக அறிவிப்பு

by gayan
June 15, 2024 1:00 am 0 comment

அவுஸ்திரேலியா அரசாங்கம் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் வீஸா விதிகளை கடுமையாக்க முடிவு செய்துள்ளது. அதன்படி சுற்றுலா வீஸாவில் அவுஸ்திரேலியாவுக்கு சென்று தங்கியிருந்து மாணவர் விசா பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இழக்கப்படுமென்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

யுத்தம், மோதல் மற்றும் வறுமை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி செல்வந்த நாடுகளில் தஞ்சமடைகின்றனர்.

அதேநேரத்தில் ஏராளமான மக்கள் வெற்றிகரமான எதிர்கால நம்பிக்கையுடன் அந்த நாடுகளில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளை நாடுகின்றனர். எனினும் ஆண்டு தோறும் பல குடியேற்றவாசிகள் சட்ட ரீதியாகவும், சட்டவிரோதமாகவும் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்கின்றனர். உயர் கல்விக்காக செல்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த தற்போது பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன்படி அவுஸ்திரேலிய அரசாங்கம் கடந்த ஆண்டு தனது வீஸா விதிகளை கடுமையாக்கும் திட்டங்களை அறிவித்தது. எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்குள் நாட்டுக்கு வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்கவும் அவுஸ்திரேலியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதேவேளை அவுஸ்திரேலியாவில் 2023ஆம் ஆண்டு ஜூலை 01ஆம் திகதி முதல் இந்த ஆண்டு ஜூன் 01ஆம் திகதிவரை சுற்றுலா வீஸாவில் வந்து மாணவர் விசாவுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை கடந்துள்ளது.

தற்காலிக பட்டதாரி வீஸா வைத்திருப்பவர்கள் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக மாணவர் விசாக்களுக்கு விண்ணப்பிப்பது 2022/23 இல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இது நாட்டின் மாணவர் வீஸா நடைமுறையை சீர்குலைப்பதாகவும், உயர் கல்வி பெறும் உண்மையான நோக்கத்துடன் நாட்டுக்குள் வரும் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்காலிக பட்டதாரி வீஸாவின் கீழ் பட்டப்படிப்புக்கு பின்னர் பணி புரியும் நேரத்தை குறைக்கவும், விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பை 50 முதல் 30 ஆக குறைக்கவும், ஆங்கிலமொழித் திறனை உயர்த்தவும் அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்திருந்திருந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT