Saturday, July 20, 2024
Home » தமிழ் பொது வேட்பாளராக களமிறங்குகிறார் அனந்தி
ஜனாதிபதி தேர்தலில்

தமிழ் பொது வேட்பாளராக களமிறங்குகிறார் அனந்தி

கட்சி அலுவலகத்தில் நேற்று அறிவிப்பு

by gayan
June 15, 2024 11:14 am 0 comment

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் அறிவித்துள்ளார்.

யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு

தெரிவித்தார். அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வேட்பாளராக முன்நிறுத்தப்பட கூடாதென்பதே.

வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் 45 சிவில் அமைப்புகளின் கூட்டணியான தமிழ் மக்கள் சபையின் தலைமையில் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட வேண்டுமென்ற கலந்துரையாடல்கள் கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டன. தமிழ் மக்கள் சபையின் தலைமையில் வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு ஆழமான கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப், ரொலோ, புளொட் உட்பட பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் இந்த கலந்துரையாடல்களில் கலந்துகொண்டன. தொடர்ச்சியாக இந்தக் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வரும் பின்புலத்திலேயே அனந்தி சசிதரன் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

என்றாலும், முன்னாள் பாராளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் அரசியல் பதவிகளில் இருந்தவர்கள் எவரும் தேர்தலில் களமிறக்கப்பட கூடாதென்ற நிலைப்பாட்டின் பிரகாரமே சிவில் அமைப்புகளின் கூட்டணியான தமிழ் மக்கள் சபை கலந்துரையாடல்களை நடத்தி வந்தது.

பேராசிரியர் ஒருவரை களமிறக்கும் அடிப்படையிலான கலந்துரையாடல்களும் இடம்பெற்றிருந்தன.

இவ்வாறு பேச்சுகள் தொடரும் சூழலில் அனந்தி சசிதரன், தாம் பொது வேட்பாளராக களமிறங்க உள்ளதாக எந்த பின்புலத்தில் அறிவித்துள்ளார் என்பது தொடர்பில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT