Wednesday, July 17, 2024
Home » ஜூன் 18 முதல் 20 வரை பாராளுமன்றம் கூடும்

ஜூன் 18 முதல் 20 வரை பாராளுமன்றம் கூடும்

by gayan
June 15, 2024 9:45 am 0 comment

பாராளுமன்றம் மீண்டும் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

கடந்த 06ஆம் திகதி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இம்மாதம் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 9.30 மணிக்கு பாராளுமன்ற கூடவுள்ளதுடன், மு.ப. 9.30 முதல் மு.ப. 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணிவரை சுற்றுலா பயணத்துறை சட்டத்தின் கீழ் 2348/38, 2352/47, 2352/48, 2360/62 மற்றும் 2360/63 ஆம் இலக்க விசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்டுள்ள ஐந்து கட்டளைகள், உரித்துப் பதிவுச் சட்டத்தின் கீழ் 2308/27 ஆம் இலக்க விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள், முடிக்குரிய காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும் விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் 2373/14 ஆம் இலக்க விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. அதனையடுத்து பி.ப. 5.00 மணி முதல் 5.30 மணிவரை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஆளும் கட்சி) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

ஜூன் 19ஆம் திகதி புதன்கிழமை மு.ப. 9.30 மணி முதல் மு.ப. 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மு.ப. 10.30 மணி முதல் பி.ப. 5.00 மணிவரை சீட்டாட்ட தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் 2366/33 மற்றும் 2369/42 ஆம் இலக்க விசேட வர்த்தமானிகளில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள், தெங்கு அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் தீர்மானம் மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் 2381/24 ஆம் இலக்க விசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT