Saturday, July 20, 2024
Home » 1 மில்லியன் டொலர்களுடன் 3 சந்தேகநபர்கள் கைது
கிளிநொச்சியில் திடீர் சோதனை

1 மில்லியன் டொலர்களுடன் 3 சந்தேகநபர்கள் கைது

by gayan
June 15, 2024 7:45 am 0 comment

கிளிநொச்சியில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் 03 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ 09 வீதி கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக கிளிநொச்சி படையினரின் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நேற்று முன்தினம் (13) இரவு 8.00 மணி

யளவில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களை திடீரென வழிமறித்து சோதனைக்கு உட்படுத்திய போது 01 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இருந்ததுடன், அமெரிக்க டொலர்களை மாற்றுவதற்கான சான்றுப் பொருட்களும் இவர்களிடம் காணப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந்த 03 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சி குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT