Saturday, July 20, 2024
Home » நாட்டின் பொருளாதாரத்தின் மீது மக்களும் சர்வதேசமும் நம்பிக்கை

நாட்டின் பொருளாதாரத்தின் மீது மக்களும் சர்வதேசமும் நம்பிக்கை

by gayan
June 15, 2024 6:00 am 0 comment

நாட்டை பலவீனப்படுத்த வேண்டாம்: எதிர்க்கட்சிகளிடம் செஹான் சேமசிங்க வேண்டுகோள்

பொருளாதாரத்தின் மீது சர்வதேசமும் நாட்டு மக்களும் நம்பிக்கை கொண்டுள்ளதால், நாட்டை பலவீனப்படுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவதை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய அனுமதி தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

2022ஆம் ஆண்டு காணப்பட்ட சமூக கட்டமைப்புக்கும் தற்போதைய நிலவரத்துக்குமிடையில் வேறுபாடுகள் காணப்படுவதாகவும் பொருளாதார மீட்சிக்காக முன்னெடுத்த தீர்மானங்களினால் நாட்டு மக்கள் குறுகியகால நெருக்கடிகளை எதிர்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT