Sunday, July 14, 2024
Home » வாக்குகளை மட்டும் குறிவைத்து செயற்படும் அரசியல்வாதிகள்

வாக்குகளை மட்டும் குறிவைத்து செயற்படும் அரசியல்வாதிகள்

தமிழ் மக்கள், தலைவர்களுக்கு நாமல் எச்சரிக்கை

by Gayan Abeykoon
June 14, 2024 9:58 am 0 comment

வாக்குகளை  மட்டுமே குறிவைத்துச் செயற்படும் அரசியல்வாதிகள் தொடர்பில் தமிழ்த் தலைவர்களும் தமிழ் மக்களும் மிக,  அவதானமாகச் செயற்பட வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷ எம்.பி,எச்சரிக்கை விடுத்துள்ளார். திடீரெனத் தமது கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் சில அரசியல்வாதிகள், வாக்குகளைப் பெறுவதற்காகவே இவ்வாறு செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

தேர்தலுக்காக மட்டும் தங்கள் கொள்கைகளை மாற்றுபவர்கள் குறித்து தமிழ் மக்கள் மிகவும் அவதானமாகச் செயற்படவேண்டும்.ஆரம்பம் முதலே 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஆதரவளித்து வரும் கட்சிகளையும், அதனை எதிர்த்த கட்சிகளையும் தமிழ் மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வெண்டும்.

அத்துடன், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு ஆதரவளித்த அரசியல் கட்சிகள் தற்போது மாறிவிட்டன.  இக் கட்சிகளின் இரட்டை வேடம் தற்போது வெளிப்பிட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ எம்பி,மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT