Saturday, July 20, 2024
Home » புனித மக்காவில் பெருமளவு யாத்திரீகள் ஒன்றுகூடியதாக அறிவிப்பு
இதுவரை 15 இலட்சத்தையும் தாண்டியது

புனித மக்காவில் பெருமளவு யாத்திரீகள் ஒன்றுகூடியதாக அறிவிப்பு

by Gayan Abeykoon
June 14, 2024 9:58 am 0 comment

ஹஜ் யாத்திரிகர்களால் புனித மக்கா நிரம்பி யுள்ளதாக சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 11 ஆம் திகதி வரை 15 இலட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு யாத்ரீகர்கள் சவூதி அரேபியாவுக்கு வருகைத்தந்துள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், எதிர்வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமெனவும் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு 18 இலட்சம் பேர் ஹஜ் யாத்திரையை மேற்கொண்டுள்ளனர். இவ்வாண்டு அதைவிட அதிகமான யாத்ரீகர்கள் மக்காவுக்கு வருகை தருவார்களென எதிர்பார்ப்பதாக சவூதி அரேபிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, புனித யாத்திரை இன்று அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கவுள்ளவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இஸ்ரேலுக்கும், பலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கிடையே நிலவும் போர் காரணமாக, காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் இவ்வாண்டு ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளவில்லையெனவும் குறிப்பிடப்படுகிறது.

எனினும், பலஸ்தீனத்தின் மேற்குக் கரையிலிருந்து சுமார் 4,200 பாலஸ்தீனர்கள் ஹஜ் கடமைக்காக சவூதி அரேபியா சென்றுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT