Saturday, July 13, 2024
Home » நலன்புரி திட்டங்கள் விரைவாக மக்களை சென்றடைய வேண்டும்

நலன்புரி திட்டங்கள் விரைவாக மக்களை சென்றடைய வேண்டும்

நடவடிக்கை எடுக்க ஆளுநர்களிடம் ஜனாதிபதி வேண்டுகோள்

by Gayan Abeykoon
June 14, 2024 7:20 am 0 comment

அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் நலன்புரித் திட்டங்களை வினைத்திறனுள்ளதாக்கி, அதன் பயன்களை மக்களுக்கு துரிதமாக வழங்குவதற்கு ஆளுநர்கள் பங்களிக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மாகாண ஆளுநர்களுடன் நேற்று முன்தினம்(12) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலிலே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

மாகாண மட்டத்திலுள்ள ஆசிரியர் பற்றாக்குறையை விரைவாகத் தீர்க்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் உறுமய காணி உறுதி வழங்கும் திட்டத்தின் வினைத்திறன் என்பன குறித்தும் விரிவாகக் இங்கு ஆளுநர்களுடன் கலந்துரையாடப்பட்டது.

உறுமய காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை வினைத்திறன் மிக்கதாக மாற்றுவதற்கு கிராம உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக மற்றுமொரு குழுவுக்கு அதிகாரத்தை வழங்கி நடமாடும் சேவைகளை நடைமுறைப்படுத்தும் சாத்தியத்தை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் மக்களை ஆர்வமூட்டி, அவர்களுக்கு அந்த நன்மையை வழங்க வேண்டிய பொறுப்பு பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நினைவுகூர்ந்தார்.

மாகாண மட்டத்தில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறையை விரைவில் தீர்க்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்த கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த, தேசிய பாடசாலைகளுக்கு 2,500 புதிய ஆசிரியர் நியமனங்களை ஜூலை 03 ஆம் திகதி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT