Thursday, July 18, 2024
Home » பல்கலைக்கு தெரிவாகிய மாணவர்கள் கௌரவிப்பு

பல்கலைக்கு தெரிவாகிய மாணவர்கள் கௌரவிப்பு

by Gayan Abeykoon
June 14, 2024 8:05 am 0 comment

பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட குருமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில்  க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தி அடைந்து பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ள  மாணவர்களை  கௌரவிக்கும் நிகழ்வு அப்பாடசாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மேற்படி பாடசாலை அதிபர் எஸ்.செல்வம் தலைமையில் இந்த கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றதுடன்,  இம்மாணவர்கள் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களால் கௌரவிக்கப்பட்டனர்.

முதல் தடவையாக இப்பாடசாலையில் கணித, விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டு ஐந்து மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி இரண்டு மாணவர்கள் கணிதப் பிரிவிலும் ஒரு மாணவர் விஞ்ஞானப் பிரிவிலும் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி சாதனை படைத்துள்ளனர்.

மற்றும் வணிக  பிரிவில் 11 மாணவர்கள் தோற்றி ஏழு மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேபோல் கலைப் பிரிவில் கணிசமான மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி சாதனை படைத்துள்ளனர். இதன்போது  க.பொ.த. உயர்தரப் பரீட்சையில்  சித்தி அடைந்த மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் அதிபர் பாராட்டு தெரிவித்துள்ளதுடன்,  அதிபருக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர்.

மணல்சேனை நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT