Thursday, July 18, 2024
Home » சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பாராட்டு
பசு வதையை தடுத்த

சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பாராட்டு

by Gayan Abeykoon
June 14, 2024 8:09 am 0 comment

யாழ். தென்மராட்சியில்  மட்டுவில் பிரதேசத்திலிருந்து துன்னாலை பிரதேசத்துக்கு கடத்திக்கொண்டு செல்லப்பட்ட பசுக்களை உயிருடன் மீட்டு எடுத்த  சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பாலித செனவிரட்னவை நேற்று  வியாழக்கிழமை சிவசேனை அமைப்பினர் பாராட்டி கௌரவித்துள்ளனர்.

அண்மையில் தென்மராட்சியின் மட்டுவில் பிரதேசத்திலிருந்து சில பசுக்களை சட்டவிரோத கும்பல் கடத்திக்கொண்டு  சென்றிருந்தது. இந்நிலையில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து விரைந்து செயற்பட்ட சாவகச்சேரி பொலிஸார்,  துன்னாலை காட்டுப்பகுதியில் வைத்து இறைச்சிக்கு வெட்டப்படவிருந்த  பசுக்களை மீட்டதுடன்,  இதன் பிரதான சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்திருந்தனர். இதன்போது சட்டவிரோத மாடறுக்கும் மடுவத்தையும் அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இந்நிலையில் பசு வதையை தடுத்த சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை சிவசேனை அமைப்பினர் நேரடியாக தேடிச் சென்று பாராட்டி கௌரவித்துள்ளனர். இந்த பாராட்டும் நிகழ்வில்  சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தமும் கலந்துகொண்டார்.

சாவகச்சேரி விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT