Thursday, July 18, 2024
Home » டெங்கு நுளம்புகள் பெருகும் சூழல்; மூவருக்கு நீதிமன்றம் அபராதம்

டெங்கு நுளம்புகள் பெருகும் சூழல்; மூவருக்கு நீதிமன்றம் அபராதம்

by Gayan Abeykoon
June 14, 2024 8:04 am 0 comment

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு நுளம்புகள் பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்தமை தொடர்பில் மூவருக்கு எதிராக நீதிமன்றத்தில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் தொடரப்பட்ட வழக்கில் 4 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ். இணுவில் மற்றும் தாவடிப் பகுதிகளில் கடந்த 8ஆம் திகதி இணுவில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் டெங்கு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.    இதன்போது டெங்கு நுளம்புக் குடம்பிகள் அதிகளவில் இருந்த இடங்கள் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் கண்டறியப்பட்டதுடன், நுளம்புகள் பரவும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருந்த மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் அவர்களால் செய்யப்பட்டது.

இந்நிலையில் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது இவர்கள் மூவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டனர்.

இதனை அடுத்து இந்த மூவரையும் எச்சரித்த மல்லாகம் நீதவான் நீதிமன்றம், இவர்கள் மூவர் மீதும் 4 ஆயிரத்து 500 ரூபாவை அபராதமாக விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT