Saturday, July 13, 2024
Home » கடத்தப்பட்ட சிறுமி பயங்கர பாதாள அறையிலிருந்து மீட்பு

கடத்தப்பட்ட சிறுமி பயங்கர பாதாள அறையிலிருந்து மீட்பு

மூன்று இளைஞர்கள் கைது, 24 வரை விளக்கமறியல்

by Gayan Abeykoon
June 14, 2024 8:46 am 0 comment

பலவந்தமாக கடத்தப்பட்ட சிறுமி புத்தள பகுதியில் பாதாள அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.சிறுமியை அடைத்து வைத்திருந்த சந்தேகநபர்.எதிர்வரும் (24) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,  புத்தள , கட்டுகஹகல்கே பகுதியிலுள்ள வீடொன்றில்

திடீரென நுழைந்த மூன்று இளைஞர்கள் உறங்கிக் கொண்டிருந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர். தடுக்க முயன்ற சிறுமியின் தந்தையின் கையை கூரிய ஆயுதத்தால் தாக்கி இவர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.இச்சம்பவம் கடந்த (19) இரவு  இடம்பெற்றிருந்தது.

இது குறித்து சிறுமியின் தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். (பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டு வெள்ளவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது,

அவருக்கு 24 வரை விளக்கமறியல் வழங்கப்பட்டது.

 

ஊவா சுழற்சி நிருபர், லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT