Saturday, July 13, 2024
Home » தேயிலை சாய நிறத்தில் மதுபானம்; பொலிஸ் விசாரணை முன்னெடுப்பு

தேயிலை சாய நிறத்தில் மதுபானம்; பொலிஸ் விசாரணை முன்னெடுப்பு

by Gayan Abeykoon
June 14, 2024 9:37 am 0 comment

யாழ். நெடுந்தீவு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட மதுபானம்,  தேயிலை சாய நிறத்தில்  மாறியது தொடர்பில் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின்  உத்தரவுக்கமைய  விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பகுதியில் அளவுக்கு அதிகமான மதுபான போத்தல்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் நெடுந்தீவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத்  தாக்கல் செய்யப்பட்டது.

அதன்போது நெடுந்தீவு பொலிஸாரினால் சந்தேக நபரிடம் இருந்து மீட்கப்பட்ட மதுபான போத்தல்கள் சீல் வைக்கப்பட்டு, சான்றுப் பொருட்களாக நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது  தன் மீதான குற்றச்சாட்டினை சந்தேக நபர் ஏற்றுக்கொண்டதை  அடுத்து அவருக்கு நீதிமன்று அபராதம்  விதித்துள்ளது.

இந்நிலையில் சான்றுப்  பொருளாக நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட மதுபான போத்தல்களில் 10 போத்தல்களை மீள அந்நபரிடம் ஒப்படைக்கப்பட்ட போது, அவற்றில் சில போத்தல்களில் இருந்த மதுபானம் நிறம் மாறி இருந்ததுடன், அடியில் மண்டி படிந்த மாதிரி காணப்பட்டுள்ளது.

அதனை அடுத்து அது தொடர்பில் நீதிமன்ற பதிவாளரிடம் முறையிடப்பட்டுள்ளது. பதிவாளர் எழுத்து மூல முறைப்பாட்டினை பெற்று, நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இதன் பின்னர் து , நீதவானின் உத்தரவில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ். விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT