Saturday, July 13, 2024
Home » வடமராட்சியில் 135Kg கஞ்சா மீட்பு

வடமராட்சியில் 135Kg கஞ்சா மீட்பு

by Gayan Abeykoon
June 14, 2024 8:30 am 0 comment

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு பகுதியில் 135 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

வடமராட்சியின் கிழக்கு தாளையடி பகுதியில் பெருமளவான கஞ்சா போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படையினர் கஞ்சா பொதிகளை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள் 135 கிலோ எனவும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக அவற்றினை மருதங்கேணி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT