Saturday, July 13, 2024
Home » நிதிமோசடி குற்றச்சாட்டிலிருந்து ரஞ்சன் ராமநாயக்க விடுதலை

நிதிமோசடி குற்றச்சாட்டிலிருந்து ரஞ்சன் ராமநாயக்க விடுதலை

by Gayan Abeykoon
June 14, 2024 6:06 am 0 comment

முன்னாள் பராளுமன்ற உறுப்பினரும் பிரபல சிங்கள சினிமா நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க மீது சுமத்தப்பட்ட நிதிமோசடி குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.

கண்டி பிரதான நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட இவ்வழக்கில் சகல குற்றங்களிலிருந்தும் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

கண்டி பிரதேச பெண் ஒருவரை திருமணம் செய்வதாக ஏமாற்றி அவரிடமிருந்து ரூ.10 இலட்சம் பணத்தை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கட்டுகஸ்தோட்டைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்முறைப்பாடு தொடர்பாக கடந்த 13 வருடங்களாக விசாரணைகள் இடம்பெற்ற வேளை கடந்த 12ஆம் திகதி மேற்படி வழக்கு விசாரணைகள் நிறைவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

கண்டி மாஜிஸ்திரேட் மற்றும் மேலதிக மாஜிஸ்திரேட் உட்பட பல நீதிமன்றங்களில் இதுதொடர்பான விசாரணைகள் இடம்பெற்றன. இறுதியாக விசாரணை நடைபெற்ற போது கண்டி பிரதான நீதவான் சாமர விக்ரமநாயக்க மேற்படி தீர்பை வழங்கி அவரை விடுதலை செய்தார்.

(அக்குறணை குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT