Tuesday, July 23, 2024
Home » ஹேமாஸ் மற்றும் Hatch இணைந்து முன்னெடுக்கவுள்ள Slingshot Accelerator இரண்டாம் கட்டம்

ஹேமாஸ் மற்றும் Hatch இணைந்து முன்னெடுக்கவுள்ள Slingshot Accelerator இரண்டாம் கட்டம்

by Rizwan Segu Mohideen
June 14, 2024 11:51 am 0 comment

ஹேமாஸ், Hatch உடன் இணைந்து Hemas x Hatch Slingshot திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளன. 2023 ஆம் ஆண்டில் முன்னெடுத்திருந்த Accelerator திட்டத்தின் வெற்றிகரமான பூர்த்தியைத் தொடர்ந்து, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள், சுகாதாரப் பராமரிப்பு போன்ற துறைகளைச் சேர்ந்த 25 ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு Slingshot 2.0 ஊடாக ஆதரவளிக்க எதிர்பார்க்கப்படுகின்றது. முதற் கட்டத்தின் போது கல்வி மற்றும் கல்வித் தொழில்நுட்பம், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள், சுகாதார பராமரிப்பு மற்றும் சரக்குக் கையாளல் போன்ற துறைகளைச் சேர்ந்த 25 ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கும், 8 ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு accelerated ஆதரவையும் வழங்கியிருந்தது. இலங்கையின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு புத்தாக்கம் மற்றும் பங்களிப்பை ஊக்குவித்து இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முன்வந்துள்ளது. 

 நீண்ட வரலாற்றைக் கொண்ட பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள ஹேமாஸ் குழுமம், வியாபார சூழலில் வெற்றிகரமாக செயலாற்றுவதற்கு புத்தாக்கத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது. இந்த அர்ப்பணிப்பின் பிரகாரம், 2023 ஆம் ஆண்டில் தனது 75 வருட பூர்த்தியை குறிக்கும் வகையில் 75 ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்கான இலக்கையும், அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியிருந்தது.  இந்த ஆரம்பநிலை நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இந்தத் திட்டங்கள் உதவியாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இலங்கையின் பொருளாதாரத்துக்கு பெருமளவு பங்களிப்பை வழங்கும் நிறுவனங்களாகவும் திகழ்கின்றன. 

Hemas x Hatch Slingshot நிகழ்ச்சித் திட்டமானது, சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் பரஸ்பர அனுகூலங்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்தத் திட்டத்தினூடாக ஆரம்பநிலை நிறுவனங்கள் பெருமளவு பயன்பெறும் என எதிர்பார்க்கப்படுவதுடன், ஆலோசனைகளைப் பெறல், பெறுமதியான வளங்களை அணுகல் மற்றும் ஹேமாஸின் பரந்த வலையமைப்பை அணுகல் போன்ற வசதிகளைப் பெற்று தமது வெற்றிப் பயணத்தை துரிதப்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும். மாறாக, புத்தாக்கமான சிந்தனைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் போன்றவற்றுக்கு வெளிப்படுத்தப்படுவதற்கான வாய்ப்பை ஹேமாஸ் பெற்று, அதன் வளர்ச்சி உறுதி செய்யப்படும். இந்த கைகோர்த்த செயற்பாடுகளினூடாக, இலங்கையினூள் மிகவும் விறுவிறுப்பான ஆரம்பநிலை கட்டமைப்பு ஏற்படுத்தப்படுவதுடன், அதனூடாக தொழில்நிலைகள் உருவாக்கப்பட்டு, தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கப்படும்.

இந்த அறிமுகம் தொடர்பில் ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் பிரதம மூலோபாய மற்றும் வளர்ச்சி அதிகாரி ரிஸ்னி பைசல் கருத்துத் தெரிவிக்கையில், “முதலாவது Hemas x Hatch Slingshot நிகழ்ச்சிக்கு கிடைத்திருந்த பெருமளவு வரவேற்பைத் தொடர்ந்து, இலங்கையின் ஆரம்ப நிலை நிறுவன கட்டமைப்புக்கு பெருமளவு ஆதரவளிக்கப்பட்டிருந்தது. Slingshot 2.0 என்பது இந்தத் திட்டத்தின் மூலோபாய தொடர்ச்சியாகும். கல்வி, கல்வித் தொழில்நுட்பம், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள், சுகாதார பராமரிப்பு மற்றும் சரக்குக் கையாளல் போன்ற பிரதான துறைகளில் இலக்கு வைக்கப்பட்ட ஆதரவை வழங்குவதனூடாக, சவால்களுக்கு தீர்வை வழங்கக்கூடிய மற்றும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய புத்தாக்கங்களை ஊக்குவிக்க நாம் எதிர்பார்க்கின்றோம். உறுதியான மற்றும் மீட்சியுடனான இலங்கை பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் ஹேமாஸின் நீண்ட கால நோக்கத்துடன் மிகவும் பொருத்தமானதாக இது அமைந்துள்ளது. ஆதரவளிக்கப்படும் ஆரம்பநிலை நிறுவனங்கள் வெற்றிகரமாக வியாபாரங்களாக மாறுவது மாத்திரமன்றி, முன்னேற்றத்தை வழிநடத்திச் செல்வோர், தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தல், நிதிசார் உள்ளடக்கத்தை தோற்றுவித்தல் மற்றும் சகல இலங்கையர்களுக்கும் பிரகாசமான எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்திருக்கும்.” என்றார். 

Hatch Works (Pvt) Ltd இன் பிரதம நிறைவேற்று அதிகாரி மெவான பீரிஸ் கருத்துத் தெரிவிக்கையில், “ஹேமாஸ் குழுமத்துடன் எமது பங்காண்மையினூடாக, ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு இயங்கக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் முக்கிய பங்களிப்பு வழங்கப்படுகின்றது. ஹேமாஸ் போன்ற பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமொன்று எவ்வாறு இயங்குகின்றது என்பது தொடர்பில் ஆரம்பநிலை நிறுவனங்கள் அறிந்து கொள்வதனூடாக பெருமளவு பெறுமதி சேர்க்கப்படுகின்றது. Slingshot 2.0 ஊடாக, அவசியமான ஆதரவையும் வளங்களையும் பெற்றுக் கொடுத்து, ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு அடுத்த நிலை வளர்ச்சியை எய்துவதற்கு மேலும் வலுச்சேர்க்க எதிர்பார்க்கின்றோம். இந்த கைகோர்ப்பினூடாக, புதிய வியாபாரங்களை ஹேமாஸ் குழுமத்தினுள் காணப்படும் நிறுவனங்களுடன் புத்தாக்கமான தீர்வுகளினூடாக மேலும் ஒன்றிணைக்க முடியும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.

Hemas x Hatch Slingshot 2.0 Accelerator திட்டத்துக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்வது தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள ஆரம்பநிலை நிறுவனங்கள் www.slingshot.lk எனும் இணையத்தளத்தினூடாக விண்ணப்பிக்க முடியும்.

கடுமையான தெரிவு செயன்முறையை இந்தத் திட்டம் கொண்டிருக்கும் என்பதுடன், அதனூடாக பொருத்தமான ஆரம்பநிலை நிறுவனங்கள் தெரிவு செய்யப்படும்.

Hemas x Hatch Slingshot 2.0 Accelerator நிகழ்ச்சித் திட்டங்களினூடாக, ஹேமாஸ் குழுமம் மற்றும் Hatch ஆகியன இலங்கையினுள் தொழில்முயற்சியாண்மையுடன் கூடிய சூழல்கட்டமைப்பை ஏற்படுத்த தம்மை அர்ப்பணித்துள்ளன. ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கான புத்தாக்கம் மற்றும் ஆதரவு போன்றவற்றுக்கான அர்ப்பணிப்பினூடாக, நிலைபேறான பொருளாதார வளர்ச்சியையும், நாட்டின் வளர்ச்சியையும் முன்னெடுப்பதற்கான பகிரப்பட்ட நோக்கம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Hemas x Hatch Slingshot 2.0 Accelerator திட்டம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு www.slingshot.lk ஐ பார்க்கவும்.

ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி பற்றி
1948 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஹேமாஸ், சிறந்த நாளைக்காக குழும்பங்களுக்கு வலுச் சேர்ப்பது எனும் எளிமையான நோக்கத்தை கொண்டிருந்தது. இந்த அடிப்படை நம்பிக்கையினூடாக எம்மால் 75 வருடங்களாக வளர்ச்சியை பதிவு செய்ய முடிந்துள்ளது. நுகர்வோர் வர்த்தக நாமங்கள், சுகாதார பராமரிப்பு மற்றும் போக்குவரத்து சேவைகள் போன்றவற்றினூடாக வாழ்க்கையை ஆரோக்கியமான முறையில் முன்னெடுக்க பங்களிப்பு வழங்கியுள்ளோம். இலங்கையின் சமூக பொருளாதார கட்டமைப்புடுன் இணைந்துள்ள ஹேமாஸ், பிராந்திய மட்டத்தில் பங்களாதேஷில் தனது செயற்பாடுகளை விஸ்தரித்துள்ளது. எமது பயணத்தில், பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் ஈடுபாடுடைய அணிகளில் தொடர்ந்தும் முதலீடுகளை மேற்கொள்வதுடன், அர்த்தமுள்ள சேவை வழங்கல்களை உருவாக்கல், நம்பிக்கையான பங்காண்மைகளை ஊக்குவித்தல் மற்றும் உள்ளடக்கமான உலகை ஏற்படுத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தி, எமது சகல பங்காளர்களுக்கும் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றோம்.

Hatch பற்றி
வியாபார incubator மற்றும் accelerator திட்டங்கள் மற்றும் புத்தாக்கமான திட்டங்கள் போன்றவற்றை வடிவமைத்து நடைமுறைப்படுத்தும் அமைப்பாக திகழ்வதுடன், 2018 ஆம் ஆண்டில் இலங்கையின் இணைந்த பணியாற்றும் பகுதியையும் நிறுவியுள்ளது.  நாட்டில் புத்தாக்கம் மற்றும் தொழில்முயற்சியாண்மை போன்றவற்றுக்கான மையமாக இன்றைய காலகட்டத்தில் கருதப்படுகின்றது. முன்னணி புத்தாக்க மையமாக கருதப்படும் Hatch, Global Startup Awards 2021 இல் பெருமைக்குரிய ‘Best Co-Working Space in the World’ மற்றும் 2022 SAARC Regional Startup Awards இல் ‘Best Incubator/Accelerator’ விருதுகளுடன் பல கௌரவிப்புகளையும் பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT