Saturday, July 20, 2024
Home » இலங்கை முன்னெடுத்த பொருளாதார மறுசீரமைப்பு வலுவான மட்டத்தில்

இலங்கை முன்னெடுத்த பொருளாதார மறுசீரமைப்பு வலுவான மட்டத்தில்

IMF இன் விசேட அறிக்கையில் தெரிவிப்பு

by Gayan Abeykoon
June 14, 2024 8:04 am 0 comment

 விரிவாக்கப்பட்ட கடன் திட்டத்தின் கீழ் இலங்கை  நடைமுறைப்படுத்தும் பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டம் வலுவான மட்டத்தில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. 

பின்தங்கியிருந்த இலங்கையின் பொருளாதார வலுவூட்டலுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் உகந்த நிலையை எட்டியுள்ளதாகவும், 2023 டிசம்பர் மாதத்துக்குள் அளவு இலக்குகளை இலங்கை அடைந்துள்ளதாகவும் நிதியத்தின் விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வொஷிங்டனில் நேற்று முன்தினம் (12) நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவில், இலங்கையின் இரண்டாவது மீளாய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், நீட்டிக்கப்பட்ட கடன் திட்டத்தின் படி மூன்றாவது கடன் தவணையாக 336 மில்லியன் அமெரிக்க ​ெடாலர்கள் உடனடியாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இலங்கையுடன் 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், 2024 பிரிவுக் கூறு IV மற்றும் இரண்டாவது மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளது. நாட்டின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் 336 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கவுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு இது இதுவரை வழங்கப்பட்ட மொத்த தொகை 762 மில்லியன் ரூபா (சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆகும்.

சர்வதேச நாணய நிதியம் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி இலங்கைக்கு The Extended Fund Facility (EFF) ஏற்பாட்டுக்கமைவாக நிறைவேற்றுக் குழு ஒப்புதல் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதற்கமைவாக இத்தொகை 2.286 பில்லியன் ரூபாவாகும். EFF இன் முதல் மதிப்பாய்வு டிசம்பர் 2023 ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி நிர்வாகக் குழுவால் நிறைவு செய்யப்பட்டது.

EFF- ஒத்துழைப்புத் திட்டம் இலங்கையின் பேரினப் பொருளியல் (Macroeconomic) ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். அத்தோடு கடன் நிலைத்தன்மை , வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்கள் மீதான பொருளாதார தாக்கத்தை குறைத்தல் மற்றும் பாதிக்கப்படக்கூடிய , வெளிப்புற இடையகங்களை மீண்டும் உருவாக்குதல் , நிதித்துறை ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதுடன் ஆளுகை உள்ளார்ந்த ஆற்றலை மேம்படுத்துவதாகும்.

பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. மொத்த உள்நாட்டு உற்பத்தி 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு பகுதியில் 3 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது. 2024 ஆம் ஆண்டு மே மாதம் பணவீக்கம் 0.9 சதவீதமாக இருந்ததுடன் மொத்த சர்வதேச கையிருப்பு ஏப்ரல் 2024 இன் இறுதியில் 5.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரித்ததுள்ளது. 2023ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9.8 சதவீதமாக அதிகரிப்பதற்கு வருமான மூலமான வரி வருவாய் உபரியாக அமைந்துள்ளது. செயல்படாத கடன்களில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும் . வங்கி பண வருவாய்வள ஆதாரங்கள் குறித்தும் பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் குறித்தும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.  இதேவேளை , சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் நேற்றை கலந்துரையாடலுக்குப் பின்னர் , பிரதி நிர்வாக பணிப்பாளரும் செயற்பாட்டு தலைவருமான கென்ஜி ஒகாமுரா (Mr. Kenji Okamura Deputy Managing Director and Acting Chair) வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘நிதி ஒத்துழைப்பு திட்டத்தின் கீழ் இலங்கையின் செயல்திறன் வலுவாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சமூக செலவினங்களுக்கான குறிகாட்டி இலக்கின் சிறிய பற்றாக்குறையைத் தவிர. அனைத்து அளவு இலக்குகளும் எட்டப்பட்டுள்ளன. பெரும்பாலான கட்டமைப்பு வரையறைகள் தாமதத்துடன் எட்டப்பட்டுள்ளன அல்லது செயல்படுத்தப்பட்டன. சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கை மறுசீரமைப்பு பலனைத் தந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதாரம் மீள வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளது. வருமான சேகரிப்பு மேம்பட்டு வருவதுடன் ,இருப்புக்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த நேர்மறையான முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், பொருளாதாரம் இன்னும் மென்மையான போக்குடனேயே காணப்படுகிறது. கடன் நிலைத்தன்மைக்கான பாதை திருப் தியடையக்கூடிய வகையில் இல்லை என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் வலுவான சீர்திருத்த முயற்சிகள், போதுமான பாதுகாப்புகள் மற்றும் தற்செயல் திட்டமிடல் ஆகியவை இந்த பாதிப்புக்களை குறைக்க உதவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிதி நிலைத்தன்மையை மீட்டெடுக்க, நிலையான வருவாய் திரட்டல் முயற்சிகள், திட்ட இலக்குகளுக்கு ஏற்ப கடன் மறுசீரமைப்பை உடனடியாக இறுதி செய்வது அவசியம். சமூக மற்றும் மூலதனச் செலவினங்களைப் பாதுகாப்பது முக்கியமானதாகும். பொது நிதி நிர்வாகத்தை மேம்படுத்துவது நிதி ஒழுங்கு விதி முறைகளை மேம்படுத்த உதவும்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT