Thursday, July 25, 2024
Home » ஸ்பா சிலோன் – ஷங்கிரி லா கொழும்பு கைகோர்ப்புடன் மீண்டும் ‘Wellness Month 2024’ நிகழ்வு  

ஸ்பா சிலோன் – ஷங்கிரி லா கொழும்பு கைகோர்ப்புடன் மீண்டும் ‘Wellness Month 2024’ நிகழ்வு  

by Rizwan Segu Mohideen
June 13, 2024 3:41 pm 0 comment

உலகின் மிகப் பாரிய ஆடம்பர ஆயுள்வேத ஆரோக்கிய வர்த்தகநாமமான ஸ்பா சிலோன் (Spa Ceylon) மற்றுமொரு ஆண்டில் ‘Wellness Month’ நிகழ்வை ஆரம்பிப்பதற்கு ஷங்கிரி-லா கொழும்பு ஹோட்டலுடனான ஒத்துழைப்பை வெற்றிகரமாக நீட்டித்துள்ளமை தொடர்பில் பெருமையுடன் அறிவித்துள்ளது. ஜுன் மாதம் முழுவதும் இடம்பெறவுள்ள தொடர் ஆரோக்கிய நிகழ்வுகள், இம்மாதத்தில் கொண்டாடப்படுகின்ற முக்கிய தினங்களான சர்வதேச ஆரோக்கிய தினம் மற்றும் சர்வதேச யோகா தினம் போன்றவற்றை அடியொற்றியதாக திட்டமிடப்பட்டுள்ளன.     

Wellness Month 2024’ நிகழ்வின் உத்தியோகபூர்வ ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், ஸ்பா சிலோன் மற்றும் ஷங்கிரி-லா கொழும்பு ஆகியன இணைந்து, 2024 ஜுன் 07 ஆம் திகதியன்று பத்திரிகையாளர் மாநாடொன்றை ஷங்கிரி-லா கொழும்பு ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்ததுடன், ஸ்பா சிலோன் நிறுவனத்தின் இணை ஸ்தாபகரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ஷிவாந்த டயஸ், ஸ்பா சிலோன் நிறுவனத்தின் இணை ஸ்தாபகரும், பணிப்பாளருமான ஷாலின் பாலசூரிய, ஷங்கிரி-லா கொழும்பின் பொது முகாமையாளர் ஹெர்வ் டுபோஸ்க், ஷங்கிரி-லா கொழும்பு மற்றும் ஷங்கிரி-லா அம்பாந்தோட்டை ஆகியவற்றின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளரான சஹர்ஷ் வதேரா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.     

பொறுப்புணர்வுமிக்க சர்வதேச ஆரோக்கிய வர்த்தகநாமம் என்ற வகையில், ஆரோக்கியம் என்பது வெறுமனே ஒரு நாட்டம் அல்லாது, அது ஒரு வாழ்க்கைமுறை என்றே நாம் நம்புகின்றோம். பணியிட ஆரோக்கியம் என்பது இந்த ஆண்டில் எமது உச்ச முன்னுரிமைகளில் ஒன்றாகக் காணப்படுகின்றது. நிறுவனங்கள் மத்தியில் விழிப்புணர்வைக் கட்டியெழுப்பி, பணியிட ஆரோக்கிய நடைமுறைகளை ஸ்தாபிப்பதற்காக இந்த ஆண்டு முழுவதும் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து நாம் செயற்பட்டு வருகின்றோம்,” என்று ஸ்பா சிலோன் நிறுவனத்தின் இணை ஸ்தாபகரும், பணிப்பாளருமான ஷாலின் பாலசூரிய அவர்கள் கருத்து தெரிவித்தார். பம்பரம் போல் சுழலும் இன்றைய உலகில், மக்கள் தொடர்ந்தும் தூண்டுதல்களின் செல்வாக்கிற்கு ஆட்கொள்ளப்படுகின்றனர். 5000 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஆயுள்வேத உயிர் விஞ்ஞானத்தின் மீதான ஆழமான அறிவுடன், எமது முழுமையான ஆரோக்கிய நடைமுறைகள், அன்றாட வாழ்வின் சுமைகளிலிருந்து ஆறுதல் பெற்று, புத்துணர்வை ஏற்படுத்தி, மனதையும், உடலையும் புத்தெழுச்சி பெறச் செய்வதற்கான ஒரு வழியாகும்,” என்று பாலசூரிய அவர்கள் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.                 

ஸ்பா சிலோன் நிறுவனத்தின் இணை ஸ்தாபகரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ஷிவாந்த டயஸ் இந்நிகழ்வில் கருத்து வெளியிடுகையில், “ஆரோக்கியம் தொடர்பான நடைமுறைகள் மற்றும் விருதை வென்ற எமது தயாரிப்பு வரிசை ஆகியவற்றின் இணைப்புடன் அனைத்து கண்டங்கள் மத்தியிலும் பிரத்தியேகமாக தொகுக்கப்பட்ட மற்றும் பல்லுணர்வுகளை தூண்டுகின்ற நிகழ்வுகளை நாம் தற்போது நடத்தி வருகின்ற சர்வதேச ஆரோக்கியச் சுற்றுலாவின் பின்னணியில் இந்த ஆரோக்கிய மாதம் மிகவும் நேர்த்தியாக ஒத்திசைகின்றது. இச்சுற்றுலா இலண்டன் மாநகரில் ஆரம்பமானதுடன், செக் குடியரசு, மாலைதீவு மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளும் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இச்சுற்றுலாவின் அடுத்த கட்டமானது ஐரோப்பாவுக்கு நகரவுள்ளதுடன், அதன் பின்னர் அவுஸ்திரேலியா, ஆசியா மற்றும் வட அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு நகரும்,” என்று குறிப்பிட்டார்.     

‘The Journey of Wellness in Motion: Entwined and Evolving Through Time’ (ஆரோக்கிய பயணத்தின் இயக்கம்: காலத்தின் மூலம் பின்னிப்பிணைந்து பரிணமிக்கின்றது) என்ற தொனிப்பொருளுடன் இடம்பெறுகின்ற ஆரோக்கிய மாத நிகழ்வுகள் அன்றாட வாழ்க்கைமுறையில் ஒவ்வொரு தருணங்களிலும் ஆரோக்கியத்தைக் கொண்டாடுவதுடன், வலிமை, சுறுசுறுப்பு மற்றும் மீள்வு போன்ற பல்வேறு அம்சங்களில் நன்றாக வாழ்வது வெளிப்படுகின்றது என்பதையும் அங்கீகரிக்கின்றது. இந்த ஆண்டு பிரத்தியேக ஆரோக்கிய நிகழ்வுகளில் நாடெங்கிலும் வெளிப்புற இடங்களில் இடம்பெறுகின்ற Peace Grounding Ritual, Ocean Ritual, மற்றும் Forest Bathing Ritual போன்றவற்றை உள்ளடக்கியுள்ளதுடன், ஷங்கிரி-லா கொழும்பில் இடம்பெறுகின்ற De-Stress Art Therapy, Sunrise Yoga, Sleep Therapy, மற்றும் Multi-Sensory Dining அனுபவங்கள் போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளன.   

இயற்கையின் அழகு மற்றும் அமைதியை வளர்க்கும் தனித்துவமான, பல்லுணர்வுகளைத் தூண்டும் ஆரோக்கிய அனுபவங்கள், உடல், உள்ளம் மற்றும் ஆன்மா இடையேயான மனித தொடர்பு மற்றும் ஸ்பா சிலோன் ஆடம்பர ஆயுள்வேத சூத்திரங்கள் ஆகியவற்றை வழங்குவதற்காக ஸ்பா சிலோன் மற்றும் ஷங்கிரி-லா கொழும்பு ஆகியன கைகோர்த்துள்ளன. இந்த அம்சங்கள் அனைத்தையும் தனது செழுமையான சூழலில் வழங்கும் ஷங்கிரி-லா கொழும்பு ஆரோக்கிய மாத நிகழ்வுகளை நடாத்துவதற்காக மிகச் சிறந்த இடமாக அமைந்துள்ளது.    

“ஸ்பா சிலோனுடன் இணைந்து ஷங்கிரி-லா கொழும்பில் ஆரோக்கிய மாத நிகழ்வுகளை ஆரம்பிப்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம். ஆரோக்கியத்தை ஊக்குவித்து, இலங்கையின் வளமான கலாச்சார பாரம்பரியத்தில் வேரூன்றியுள்ள உண்மையான, மாற்றத்தை ஏற்படுத்தவல்ல அனுபவங்களை வழங்குவதில் எமது பரஸ்பர அர்ப்பணிப்பை இக்கூட்டாண்மை பிரதிபலிக்கின்றது. பல்வகைப்பட்ட செயற்பாடுகள் மற்றும் நிகழ்வுகளின் மூலமாக, புத்தெழுச்சி பெற்று, முழுமையான ஆரோக்கியத்தை அனுபவிப்பதற்கான ஒப்பற்ற வாய்ப்புக்களை வழங்குவதே எமது நோக்கம்,” என்று ஷங்கிரி-லா கொழும்பின் பொது முகாமையாளர் ஹெர்வ் டுபோஸ்க் குறிப்பிட்டார்.     

 இப்பத்திரிகையாளர் மாநாட்டில் ஷங்கிரி-லா கொழும்பு மற்றும் ஷங்கிரி-லா அம்பாந்தோட்டை ஆகியவற்றின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளரான சஹர்ஷ் வதேரா அவர்கள் தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்கையில், “ஆரோக்கிய மாதத்தினை ஷங்கிரி-லா கொழும்பில் நடத்துவதற்காக ஸ்பா சிலோனுடன் ஒத்துழைப்பதையிட்டு நாம் மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். எமது விருந்தினர்களின் பல்வகைப்பட்ட தேவைகளை நிறைவேற்றுவதற்காக மகத்தான ஆரோக்கிய அனுபவங்களை வழங்கும் எமது அர்ப்பணிப்பை இந்த ஒத்துழைப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. மன அழுத்தத்தைப் போக்கும் சிகிச்சைக் கலை அமர்வுகள் முதல் பல்லுணர்வுகளையும் தூண்டும் உணவு விருந்து அனுபவங்கள் வரை உள்ளம், உடல் மற்றும் ஆன்மா ஆகியவற்றின் நலனை மேம்படுத்தும் வகையில் எமது நிகழ்வுகள் மிகவும் கவனமாகத் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் இலங்கையை ஆரோக்கிய சுற்றுலாவுக்கான ஒரு முன்னணி நாடாக நிலைநிறுத்துவதில் இந்த முயற்சிகள் முக்கிய பங்கு வகிக்கும்,” என்று குறிப்பிட்டார்.          

ஸ்பா சிலோன் பற்றி:
ஷிவாந்த டயஸ் மற்றும் ஷாலின் டயஸ் ஆகிய சகோதரர்களால் 2009 மே மாதத்தில் ஸ்தாபிக்கப்பட்ட ஸ்பா சிலோன், சர்வதேச ஆடம்பர ஆரோக்கியத் துறையில் வலுவான சக்தியாக வேகமாக வளர்ச்சி கண்டுள்ளதுடன், தனது ஆடம்பர ஆயுள்வேத வர்த்தகநாமத்தை சர்வதேசத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. 33 நாடுகள் மத்தியில் 140 சேவை மையங்களுடன் விரிவான சர்வதேச அடிச்சுவட்டைக் கொண்டுள்ளதுடன், உலகின் மிகப் பாரிய ஆடம்பர ஆயுள்வேத சங்கிலியாகவும் திகழ்ந்து வருகின்றது. உடல், உள்ளம் மற்றும் ஆன்மா ஆகியவற்றை சாந்தப்படுத்தி, ஆறுதல் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட மன்னர் கால ஆரோக்கிய சூத்திரங்கள் மற்றும் தனித்துவமான வகையிலான மிகச் சிறந்த ஸ்பா சிகிச்சைகளை வழங்குவதற்காக பண்டைய இலங்கையின் நேசத்தையும், பண்டைய ஆயுள்வேத அறிவையும் இணைத்து தனது சேவைகளையும், தயாரிப்புக்களையும் ஸ்பா சிலோன் வழங்கி வருகின்றது. நெறிமுறைகளைப் பின்பற்றிய மற்றும் விலங்குகளை துன்புறுத்தாத வகையில் பெறப்பட்ட சேர்க்கைப்பொருட்களைப் கொண்டு ஸ்பா சிலோன் தனது தயாரிப்புக்களை உற்பத்தி செய்வதுடன், நிலைபேணத்தகு வணிக நடைமுறைகள் மீதான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் தனது சமூகங்களின் நலன் மீதான அக்கறை ஆகியவற்றை மீளவும் ஆணித்தரமாக உறுதிப்படுத்தியுள்ளது.   

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT