Saturday, July 13, 2024
Home » சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்திற்காக வாகனங்கள் இறக்குமதி

சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்திற்காக வாகனங்கள் இறக்குமதி

- இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 14 முடிவுகள்

by Prashahini
June 13, 2024 11:29 pm 0 comment

– புதிய குடிவரவுச் சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்

1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளின் கீழ் வெளியிடப்பட்டுள்ள தரநியமங்கள் மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 14 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளுக்கமைய இலங்கையில் மோட்டார் வாகன இறக்குமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருப்பினும், சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுக்கமைய சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்திற்காக 250 சிறிரக பேருந்துகள், 750 வான் வண்டிகளை இறக்குமதி செய்வதற்காக 2024.04.01 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2024 ஆண்டு 07 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

அத்துடன், தேசிய பொருளாதாரம், பொதுச் சுகாதாரம் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு நோக்கங்களுக்காக 217 இயைபு மறைக் குறியீடுகளின் கீழ் (HS Code) வகைப்படுத்தப்பட்டுள்ள 122 பொருட்களுக்கான இறக்குமதியின் போது தரநியம் மற்றும் தரக்கட்டுப்பாட்டுக்காக 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்டுள்ள 2017 இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாடு (தரநிர்ணயம் மற்றும் தரக்கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகளை இரத்துச் செய்து, துரிமான, பாதுகாப்பான மற்றும் பயனுறுவாய்ந்த போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கும், உள்நாட்டு உற்பபத்திகள் மற்றும் இறக்குமதி உற்பத்திகளுக்கான நியாயமான வாய்ப்புக்களை உறுதிப்படுத்தும் வகையில் ஒழுங்குவிதிகளை விதிப்பதற்காக 2024.03.11 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் தரநிர்ணயம் மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள குறித்த ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்குச் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. உத்தேச இலங்கை மலேசியா சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்

இலங்கையின் பொருளாதார உறுதிப்பாட்டை மீண்டும் அடைவதற்காக ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட நேரடி வெளிநாட்டு முதலீடுகளை கவர்ந்திழுத்தல், ஏற்றுமதிப் பன்முகப்படுத்தல் மற்றும் பண்டங்கள் சேவைகளுக்கான சந்தை அணுகலை விரிவாக்கம் செய்ய வேண்டிய முக்கியத்துவம் கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக இலங்கை பலம் வாய்ந்த மூலோபாயப் பொருளாதாரங்களுடன் கூடிய நாடுகளுடன் பொருளாதார உறவுகளை விருத்தி செய்ய வேண்டிய தேவையுள்ளது. ஆசியான் (ASEAN) அமைப்பின் மற்றும் பிராந்திய நீடித்த பொருளாதாரப் பங்காண்மையில் முக்கிய அங்கத்தவரான மலேசியா, இலங்கையின் 34 ஆவது ஏற்றுமதி முடிவிடமாக அமைவதுடன், 2023 ஆம் ஆண்டில் குறித்த நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள மொத்த பெறுமதி 58.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். அதற்கமைய இலங்கை மற்றும் மலேசியா இற்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அதற்கான கலந்துரையாடல்களை ஆரம்பிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

03. இலங்கை முதலீட்டு சபையால் அங்கீகாரம் வழங்கப்படும் வர்த்தகங்களுக்காக மீண்டும் தயார் செய்து ஏற்றுமதி செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட மசாலாப் பொருட்கள் இறக்குமதி

செய்வதற்காக வாய்ப்புகளை வழங்குவதற்கு 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் இறக்குமதிக் கட்டுப்பாட்டு ஒழுங்கு விதிகளை வெளியிடல்
1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 2024/03 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குவிதிகளை மீண்டும் மீளாய்வு செய்து விபரங்களுடன் கூடிய அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு 2024.03.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் செயலாளர், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் விவசாய மற்றும் பெருந்தோட்டத் துறை அமைச்சின் செயலாளர் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் உள்ளடங்கிய கீழ்வரும் விதந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• தெரிவு செய்யப்பட்ட மசாலாப் பொருட்கள் இறக்குமதி, பதனிடல் மற்றும் எண்ணெய் வடிகட்டல் ஒலியோரசின் மற்றும் ஒதுக்கங்களுக்கான மீள் ஏற்றுமதி செய்கின்ற நடவடிக்கை முறையின் கீழ் இலங்கை முதலீட்டு சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள வர்த்தகங்களுக்காக மீண்டும் தயார் செய்து மீள் ஏற்றுமதிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள மசாலாப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வாய்ப்புக்களை வழங்கல்

• மேற்குறிப்பிட்ட பணிகளுக்காக 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய இறக்குமதி மட்டுமே ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்கு விதிகளை வெளியிடல்.

04. இலங்கையின் தேசிய இறக்குமதி வரிக் கொள்கை

நாட்டில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்காக போட்டித்தன்மையான நிலைமையை பேணுவதற்கு தெளிவான, எளிமையான, ஒன்றிணைவான மற்றும் முற்கூட்டியே தீர்மானிக்கக் கூடிய இறக்குமதி வரி முறைமையைப் பேணுதல் முக்கியமான காரணியாக அமையும். கடந்தகால அரசாங்கங்கள் அவ்வப்போது அறிமுகப்படுத்தியுள்ள பல்வேறு கொள்கைகளுக்கமைய இறக்குமதி வரிக் கொள்கை திருத்தம் செய்யப்பட்டமையால் எமது நாட்டுக்கு முதலீட்டுக்கான போட்டித்தன்மையான நிலைமைக்கு எதிர்மயான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. குறித்த நிலைமையை கருத்தில் கொண்டு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரின் ஆலோசனைக்கமைய வரிக் கொள்கையை தயாரிப்பதற்காக திறைசேரியின் வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையிலும் மற்றும் ஏற்புடைய நிறுவனங்களின் அங்கத்துவத்துடன் கூடிய தொழில்நுட்பக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவால் வணிக நடவடிக்கைகள் தொடர்பான நிபுணர்களின் மற்றும் இவ்விடயத்துடன் தொடர்புடைய அமைச்சுக்களின் செயலாளர்களின் வழிகாட்டலின் கீழ் வர்த்தக மற்றும் தொழிற்துறை சமூகங்களுடன் கலந்துரையாடி தேசிய இறக்குமதி வரிக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

2025 ஜனவரி மாதம் தொடக்கம் மூன்று கட்டங்களின் கீழ் குறித்த தேசிய வரிக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்காகவும், பங்காளர்களை தெளிவுபடுத்தல் மற்றும் இணக்கங்களை உறுதிப்படுத்தும் நோக்கில் சுங்கக் கட்டளை சட்டத்தின் 101 ஆம் பிரிவுகள் குறித்த கொள்கையை வர்த்தமானியில் வெளியிடுவதற்காகவும், நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. மாவட்டக் கைத்தொழில் சபையை தாபித்தல்

பிரதேச ரீதியாக தாபிக்கப்பட்டுள்ள சிறிய, நுண் மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களுக்கு தற்போது பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. குறித்த சவால்களுக்கு முகங் கொடுப்பதற்காக நியாயமான சூழலை உருவாக்குவதற்காக மிகவும் பொருத்தமானதும், இலகுவாக அணுகக் கூடியதும், அனைவருக்கும் நன்மைகள் கிடைக்கக்கூடிய முறைமை ஒன்றின் தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்காக பல்துறைசார் மற்றும் ஒன்றிணைந்த அணுகுமுறை மூலம் நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில்களுக்காக பிரதேச மட்டத்தில் தரப்பண்பு மற்றும் வினைத்திறனான நிறுவன ஒத்துழைப்புக்கள் மற்றும் சேவைகளை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் குறித்த அனைத்து நிறுவனங்களுக்கிடையே பலமான தொடர்புகளை ஏற்படுத்தல், வலையமைப்பை உருவாக்குதல் மற்றும் ஊக்குவித்தல் போன்றன தேவையாகவுள்ளது. அதற்கமைய நடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் 25 “மாவட்ட கைத்தொழில் ஊக்குவிப்பு சபைகளைத்” தாபிப்பதற்கும், குறித்த சபைகளின் கட்டமைப்பு பணிப்பொறுப்பு மற்றும் பொறுப்புகளைத் தீர்மானிப்பதற்கு மற்றும் ஒட்டுமொத்த செயன்முறையை கண்காணிப்பதற்காக அரசதுறை, தனியார் துறை மற்றும் ஏனைய ஏற்புடைய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கூடிய நடவடிக்கைக் குழுவொன்று நியமிப்பதற்கும் கைத்தொழில் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. கம்பளை பழைய நீதிமன்ற கட்டிடத் தொகுதி அமைந்துள்ள காணியை நகர விருத்தி அதிகார சபைக்கு கையகப்படுத்தல்

கம்பளை பழைய நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் காணப்படுகின்ற காணியில் அமைந்துள்ள பழைய நீதிமன்றக் கட்டிடத்தை உடைத்து அகற்றாமல் நவீனமயப்படுத்துவதற்கும், குறித்த வளாகத்தை வாகனத் தரிப்படமாக அபிவிருத்தி செய்வதற்கும் மத்திய பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த காணியின் கலப்பு அபிவிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி அதிகார சபையின் முகாமைத்துவ சபையில் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. அதற்கமைய, இது தொடர்பாக சமர்ப்பித்துள்ள முன்மொழிவை கருத்தில் கொண்டு அரசு பிரதம விலைமதிப்பீட்டாளரின் தீர்மானிக்கின்ற பெறுமதியை நகர அபிவிருத்தி அதிகாரசபையால் ஒருங்கிணைந்த நிதியத்துக்கு செலுத்துகின்ற அடிப்படையில், கம்பளை நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பொது வாகனத் தரிப்பிடம் மற்றும் கலப்பு அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கம்பளை பழைய நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் அமைந்துள்ள காணியை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு ஒப்படைப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. உஷ்பெகிஸ்தான் குடியரசு உலக வர்த்தக அமைப்புக்கு பிரவேசிப்பது தொடர்பான கூட்டு ஒப்பந்தத்திற்கு கையொப்பமிடல்

உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினராவதற்கு உஷ்பெகிஸ்தான் குடியரசு ஏனைய உறுப்பு நாடுகளுடன் பல வருடங்களாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றது. உலக வர்த்தக அமைப்பின் பொதுச்சபையால் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து பிரவேசிப்பதற்கான கூட்டு வரைபுடன், குறித்த விதந்துரைகளைப் பொதுச் சபைக்கு சமர்ப்பிப்பதற்காக செயற்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தேயிலை ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன், குறித்த செயற்குழுவில் உறுப்பினராக இலங்கையும் இருப்பதுடன், இலங்கையின் அதிகாரிகள் உஷ்பெகிஸ்தான் அதிகாரிகளுடன் அது தொடர்பாகக் கலந்துரையாடி அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்கு திர்பார்க்கப்படுகின்ற தேயிலை உற்பத்திகளுக்கு மிகவும் குறைந்த வர்த்தக வரிகள் பற்றிய ஆரம்ப கட்ட உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய உலக வர்த்தக அமைப்பின் குறித்த ஏற்பாடுகளுக்கமைய இருதரப்பு பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றுமையை உறுதிப்படுத்தி, உஷ்பெகிஸ்தானால் “பிரவேசிப்பதற்கான கூட்டு ஒப்பந்தம்” செயற்குழுவின் அங்கத்தவரான இலங்கையுடன் கையொப்பமிட வேண்டியுள்ளது. குறித்த ஒப்பந்தத்திற்கு கையொப்பமிடுவதற்காக வர்த்தக வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கி உள்ளது

08. இலங்கை உணவு விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப நிறுவனத்தை தாபிப்பதற்கான சட்டமூலம்

இலங்கை உணவு விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப நிறுவனத்தைத் தாபிப்பதற்காக சட்டமூலத்தை தயாரிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் திருத்தங்கள் பல முன்மொழியப்பட்டுள்ளது. குறித்த திருத்தங்களை உள்ளடக்கி இலங்கை உணவு விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப நிறுவனத்தைத் தாபிப்பதற்கான சட்டமூலத்தை தயாரிக்குப் பணிகளை துரிதப்படுத்தி நிறைவு செய்யுமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்ஙீகாரம் வழங்கியுள்ளது.

09. பாலியல் தொல்லைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களைத் தடை செய்வதற்கான சட்ட ஏற்பாடுகளைப் பலப்படுத்துவதற்காக தண்டனைச் சட்டக் கோவையைத் திருத்தம் செய்தல்

பொது இடங்களில் இடம்பெறுகின்ற பாலியல் தொல்லைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் உள்ளிட்ட அனைத்துவித பாலியல் தொல்லைகள் மற்றும் துன்புறுத்தல்களையும் குற்றவியல் குற்றமாக்குவதற்கான தண்டனைச் சட்டக் கோவையில் திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்காக 2022.12.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. புதிய குடிவரவுச் சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்

1948 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க குடிவரவு மற்றும் குடியகல்வுச் சட்டம் பல சந்தர்ப்பங்களில் திருத்தம் செய்யப்பட்டிருப்பினும், குறித்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள துறைகளை துரிதமாக இடம்பெறுகின்ற மாற்றங்கள், தொழிநுட்பங்களின் துரித முன்னேற்றம் போன்ற சர்வதேசப் போக்குகளைக் கருத்தில் கொண்டு, அதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக 2021.02.15 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. 2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் தொடர்பான அதிகாரசபைச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்

2003 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் தொடர்பான அதிகாரசபைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2023.05.02 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அவதானிப்புக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. குறித்த அவதானிப்புக்களின் அடிப்படையில் குறித்த சட்டமூலத்தை தயாரிக்கும் பணிகளைத் துரிதப்படுத்தி நிறைவு செய்வதற்கு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. பெற்றோல் 92 Unl 05 கப்பல் தொகையிருப்பை கொள்வனவு செய்வதற்காக நீண்டகால ஒப்பந்தம் வழங்கல்

2024.07.15 தொடக்கம் 2025.01.14 வரையான 06 மாதங்களுக்கான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 92 Unl பெற்றோல் பரல்கள் 1.5+/- 5% மில்லியன்களை விநியோகிப்பதற்காக கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விநியோகத்தர்களிடம் விலைமுறி கோரப்பட்டுள்ளது. நிரந்தர தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழுவின் விதந்துரைக்கமைய அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவால் M/s Aditya Birla Global Trading (Singapore) Pte. Ltd இற்கு வழங்குவதற்கு விதந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கம்பனிக்கு அப்பெறுகையை வழங்குவதற்காக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

13. 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் புதிய ஒழுங்குவிதிகளை வெளியிடல்

நாட்டில் வெளிநாட்டு செலாவணி இருப்புக் குறைவாகக் காணப்பட்ட காலப்பகுதியில் வதிவிடதாரர்களால் மேற்கொள்ளப்பட்ட ஒருசில மூலதனக் கொடுக்கல் வாங்கல்களுக்கான வெளிப்பாய்ச்சல் பண அனுப்பல்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு மட்டுப்பாடுகளை விதித்து நாட்டின் நிதி நிலைமையை உறுதிப்படுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் ஒழுங்குவிதியொன்று 2020.04.02 தொடக்கம் வலுவாக்கப்பட்டுள்ளது. குறித்த ஒழுங்குவிதியின் செல்லுபடியான காலம் 06 மாத காலத்துடன் தொடர்ச்சியாக அவ்வப்போது வெளியிடப்பட்டதுடன், தற்போது நடைமுறையிலுள்ள ஒழுங்குவிதி 2024.06.19 வரை செல்லுபடியாகும். குறிப்பாக வதிவிடக் கம்பனிகளுக்கு வெளிநாடுகளில் தமது வர்த்தக நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்வதற்கான வசதிகளை வழங்குவதற்காக ஒருசில இடைநிறுத்தங்கள்ஃமட்டுப்பாடுகளை மேலும் நீக்கி/தளர்த்தி 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் 22(1) பிரிவின் கீழ் 2024.06.20 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் 06 மாத காலத்திற்கு புதிய ஒழுங்குவிதியை வெளியிடுவதற்கு மத்திய வங்கி விதந்துரை செய்துள்ளது. அதற்கமைய, குறித்த விதந்துரையை நடைமுறைப்படுத்துவதற்காக 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டு செலாவணிச் சட்டத்தின் 22(1) பிரிவின் கீழ் ஒழுங்குவிதியொன்றை வெளியிடுவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

14. நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் இறுதி வரவு செலவு நிலைமை தொடர்பான ஆண்டறிக்கை – 2023

2003 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க நிதி முகாமைத்துவ (பொறுப்புக்கள்) சட்டத்தின் 13 ஆவது பிரிவின் கீழ் இறுதி வரவு செலவு நிலைமை பற்றிய அறிக்கை நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரால் பாராளுமன்றத்திற்கும் பொது மக்களுக்கும் நிதியாண்டு முடிவடைந்து 05 மாதங்களுக்குள் வெளியிடப்படல் வேண்டும்.

அதற்கமைய, 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை பேரண்டப் பொருளாதார முகாமைத்துவம் தொடர்பாக அரச நிதிக் கொள்கை, மூலோபாயங்கள் மற்றும் சவால்கள், 2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரப் போக்குகள், அரச நிதிப் பிரிவு, உண்மைப் பிரிவு, உள்நாட்டு கேள்வி வழங்கல், முதலீடுகள் மற்றும் சேமிப்புக்கள், வெளிநாட்டுப் பிரிவு மற்றும் நிதிப் பிரிவின் அபிவிருத்திகள், பணவீக்கம் மற்றும் உலகளாவிய பொருளாதாரப் போக்குகளை உள்ளடக்கி 2023 ஆம் ஆண்டுக்கான இறுதி வரவு செலவு நிலைமை பற்றிய அறிக்கை 2024.05.31 அன்று நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT