Tuesday, July 23, 2024
Home » கொமர்ஷல் வங்கியின் வர்த்தகக் கழகம் நடத்திய இறக்குமதி, ஏற்றுமதியாளர்களுக்கான நிகழ்வு

கொமர்ஷல் வங்கியின் வர்த்தகக் கழகம் நடத்திய இறக்குமதி, ஏற்றுமதியாளர்களுக்கான நிகழ்வு

by Gayan Abeykoon
June 12, 2024 3:28 pm 0 comment

கொமர்ஷல் வங்கியினால் இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு வங்கியின் வர்த்தகச் சேவைகளை இலகுவாக அணுகுவதன் மூலம் அவர்களை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட தளமான கொமர்ஷல் வங்கி வர்த்தகக் கழகம் (ComBank Trade Club) ஆனது அண்மையில் 100 க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கவும் அவர்களது தேவைகள் மற்றும் கருத்துகள் பற்றி கலந்துரையாடவும் நிகழ்வொன்றை நடத்தியது. ‘பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளித்தல் ‘எனும் தொனிப்பொருளில் மரினோ பீச் ஹோட்டலில் இடம்பெற்ற இந்நிகழ்வானது, கொமர்ஷல் வங்கியின் வாடிக்கையாளர்களான இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயக்கொள்கைச்சபையின் அங்கத்தவரான பேராசிரியர் திரு.பிரியங்க துனுசிங்க, வணிக திணைக்களத்தின் பணிப்பாளரான   நலிந்த விஜேரத்ன, மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் (IRD) ஆணையாளர்   பிரதீப் சில்வா, அத்துடன் Diesel & Motor Engineering PLC (DIMO) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் மற்றும் பிரதம நிதியியல் அதிகாரியுமான சுரேஷ் குணரத்ன, ஆகிய திறன் கொண்ட ஆளுமைகளின் அறிவு மற்றும் அனுபவத்திலிருந்து பயன்களை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பினை வழங்கியது.

உள்ளடக்கப்பட்ட தலைப்புகள்  நாட்டின் தற்போதைய பொருளாதார மற்றும் வர்த்தக சூழல், வர்த்தக வாடிக்கையாளர்களுக்கு வணிக திணைக்களம் வழங்கும் சேவைகள்; வெளிநாட்டு வர்த்தக பணிகள் மூலம் கிடைக்கும் நன்மைகள்;, இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான வரிச் சலுகைகள் மற்றும் விலக்குகள்; மற்றும் வாகன போக்குவரத்து துறைக்கு அப்பாற்பட்ட பல்வகை வணிகத்தின் வெற்றிக் கதைகள் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT