Tuesday, July 23, 2024
Home » யூனியன் அஷ்யூரன்ஸ் ஏற்பாடு செய்த Leader Conference 2024

யூனியன் அஷ்யூரன்ஸ் ஏற்பாடு செய்த Leader Conference 2024

by Gayan Abeykoon
June 12, 2024 2:28 pm 0 comment

யூனியன் அஷ்யூரன்ஸ் தனது அறிமுக Leader Conference 2024 நிகழ்வை குருநாகல், Epitome ஹோட்டலில் முன்னெடுத்திருந்தது. இதில் 250 க்கும் அதிகமான பங்குபற்றுனர்கள் பங்கேற்றிருந்ததுடன், அதில் யூனியன் அஷ்யூரன்ஸ் கிளை வலையமைப்பைச் சேர்ந்த முகவர் தலைமைத்துவ மற்றும் விற்பனை தலைவர்கள் பலரும் அடங்கியிருந்தனர். தலைமைத்துவ விருத்தி மற்றும் சிறப்பு ஆகியவற்றுக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பின் மற்றுமொரு மைல்கல்லாக இது அமைந்திருந்தது.

Leader Conference இனூடாக சிறப்பாக செயலாற்றும் தலைவர்களின் சாதனைகளை கௌரவிக்க எதிர்பார்க்கப்படுவதுடன், அவர்களுக்கு பரிபூரண பயிற்சி மற்றும் விருத்திக்கான வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதையும் இலக்காக கொண்டுள்ளது. பயிற்சிகளை வழங்குவதில் நிபுணரான நாலக ஹேவாமத்தும அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட அமர்வு நிகழ்வில் அதிகளவு முக்கியத்துவத்தைப் பெற்றிருந்தது. தலைமைத்துவ திறன்களை மேம்படுத்திக் கொள்வது தொடர்பில் தாம் கொண்டுள்ள ஆழமான அறிவை இவர் பகிர்ந்து கொண்டார். தலைமைத்துவம் வகிப்போருக்கு தமது செயற்பாட்டு வினைத்திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும், உயர்ந்த சாதனைகளை எய்தவும் செயலாற்றக்கூடிய தந்திரோபாயங்களை இவரின் பயிற்சி வழங்கியிருந்தது. பயிற்சி அமர்வுகளுக்கு மேலதிகமாக, சிறப்பாக செயலாற்றும் தலைவர்களுடனான குழுநிலை கலந்துரையாடலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் போது,  2024 இன் முதல் காலாண்டில் சிறப்பாக செயலாற்றியிருந்த தலைவர்களை கௌரவித்து விருதுகள் வழங்கும் நிகழ்வும் இதன் போது முன்னெடுக்கப்பட்டது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT