Saturday, July 20, 2024
Home » யாழில். நடந்து சென்றவர் மீது மோதிய டிப்பர்; இளம் குடும்பஸ்தர் பலி

யாழில். நடந்து சென்றவர் மீது மோதிய டிப்பர்; இளம் குடும்பஸ்தர் பலி

by Prashahini
June 12, 2024 1:58 pm 0 comment

யாழ்ப்பாணத்தில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தவரை டிப்பர் வாகனம் மோதியதில் குறித்த நபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் குருணாகல் பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் இன்று (12) அதிகாலை வேளை யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில், நுணாவில் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த வேளை , யாழ்ப்பாணத்தில் இருந்து சாவகச்சேரி நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் மோதியுள்ளது.

அதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு யாழ்,போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT