Sunday, June 16, 2024
Home » நிலையானதும் ஆரோக்கியமானதுமான சீன – இந்திய உறவை எதிர்பார்க்கிறோம்

நிலையானதும் ஆரோக்கியமானதுமான சீன – இந்திய உறவை எதிர்பார்க்கிறோம்

- சீன வெளிவிவகார அமைச்சு

by Rizwan Segu Mohideen
June 11, 2024 9:59 am 0 comment

நிலையானதும் ஆரோக்கியமானதுமான சீன – இந்திய உறவை எதிர்பார்ப்பதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.

லோக் சபா தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கும் அவர் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி மற்றும் தேசிய ஜனநாயகக்கூட்டணிக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்து விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டிருப்பதாவது, இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஆரோக்கியமானதும் நிலையானதுமான உறவு நிலவுவது இரு தரப்பினரதும் பொதுவான நலன்களுக்கு மாத்திரமல்லாமல், பிராந்தியத்தினதும் உலகினதும் அமைதிக்கும் அபிவிருத்திக்கும் பக்கபலமாக அமையும்.

இரு நாட்டு மக்களின் அடிப்படை நலன்களுக்காக இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நாம் தயாராக உள்ளோம். குறிப்பாக ஆரோக்கியமானதும் நிலையானதுமான பாதையில் எமக்கிடையிலான உறவுகளை மேம்படுத்த எதிர்பார்த்துள்ளோம் என்றும் கூறியுள்ளார்.

நடந்து முடிந்த இந்தியாவின் 2024 லோக் சபா தேர்தலில் பிரதமர் மோடியும் அவர் தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணியும் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ள சூழலில் சீன வெளிவிவகார அமைச்சின் ​பேச்சாளர் இவ்வாறு​ குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT