260
அக்கரைப்பற்று கல்வி வலயமட்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியில் பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலய அணி அக்கரைப்பற்று வலயமட்ட சம்பியனாகியது.
பாலமுனை பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த வாரம் (05) இடம் பெற்ற 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான வலய மட்ட உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் அக்கரைப்பற்று அஸ்–ஸிறாஜ் மகா வித்தியாலய அணியை 4–3 என்ற கோல்கள் அடிப்படையில் பாலமுனை மின்ஹாஜ் அணி வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்