Sunday, June 16, 2024
Home » மேற்கிந்திய தீவுகளுக்கு 134 ஓட்டங்களால் வெற்றி

மேற்கிந்திய தீவுகளுக்கு 134 ஓட்டங்களால் வெற்றி

by damith
June 10, 2024 10:19 am 0 comment

உகண்டா அணிக்கு எதிரான டி20 உலகக் கிண்ண சி குழுவுக்கான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 134 ஓட்டங்களால் இமாலய வெற்றி ஒன்றை பெற்றது.

புரோவிடன்ஸில் இலங்கை நேரப்படி நேற்று (09) நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை பெற்றது. ஜோன்சன் சார்ல்ஸ் 42 பந்துகளில் 44 ஓட்டங்களை பெற்றார்.

இந்நிலையில் பதிலெடுத்தாடிய உகண்டா அணி 12 ஓவர்களில் 39 ஓட்டங்களுக்கே சுருண்டது. அந்த அணியில் ஒருவர் மாத்திரமே இரட்டை இலக்க ஓட்டத்தை பெற்றார். இது உலகக் கிண்ணப் போட்டி ஒன்றில் அணி ஒன்று பெற்ற மிகக் குறைந்த ஓட்டங்கள் என்ற சாதனையையும் சமன் செய்வதாக அமைந்தது. முன்னதாக 2014 இல் இலங்கைக்கு எதிராக நெதர்லாந்து அணி 39 ஓட்டங்களுக்கு சுருண்டது. பந்துவீச்சில் அகீல் ஹொஸை ஐந்து விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

முன்னதாக பி குழுவுக்காக நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஆஸி. அணி 36 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. தவிர நெதர்லாந்து அணியை தென்னாபிக்க அணி 4 விக்கெட்டுகளால் போராடி வீழ்த்தியது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT