மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம் இனிய நந்தவனம் மாத இதழ் இணைந்து நடத்தும் தமிழ் ஹைக்கூ மூன்றாவது உலக மாநாடு மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் அரங்கில் நடைபெற்றது. கவிஞர் சகா என்கிற கஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டின் தொடக்க விழாவில் கவிஞர் முரா வரவேற்புரையாற்றினார். இனிய நந்தவனம் மாத இதழ் ஆலோசகர் ரொட்டேரியன் மேஜர் டோனர் டாக்டர் கே சீனிவாசன் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் மகாகவி பாரதியாரின் கொள்ளுப்பேத்தி கவிஞர் உமா பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் முனைவர் அவ்வை அருள் மாநாட்டைத் தொடங்கி வைத்து அன்புரை நிகழ்த்தினார். தமிழ் ஹைக்கூ முன்னோடி ஓவியக் கவிஞர் அமுத பாரதி, கலால் சுங்கவரித்துறை உதவி ஆணையர் ஜி வெங்கட்சுப்பிரமணியன் தமுஎகச அறம் கிளை செயலாளர் உமர் பாரூக் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர். மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் கவிஞர் நந்தவனம் சந்திரசேகரன் மற்றும் மாநாட்டு ஆலோசகர் கவிஞர் மு.முருகேஷ் ஆகியோர் மாநாட்டு நோக்கவுரை ஆற்றினர். தொடக்க விழா அமர்வில் தூண்டில் மாநாட்டுச் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. தூண்டில் மாநாடு சிறப்பு மலரை ஓவியக் கவிஞர் அமுதபாரதி வெளியிட இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபன ஆலோசகர் இலக்கியப்புரபலர் அ.ஹாசிம் உமர் பெற்றுக்கொண்டார். தொடக்க விழா நிகழ்வுகளை கவிஞர் அன்புத்தோழி ஜெயஸ்ரீ ஒருங்கிணைத்தார். மாநாட்டில் ஹைக்கூ வாசிப்பரங்கம் ,பகிர்வரங்கம், ஹைக்கூ கவிதை மற்றும் கட்டுரைகள் நூல் வெளியீட்டரங்கம், ஆகியன நடைபெற்றன. மாநாட்டு நிறைவரங்கில் அயலகத்திலிருந்து தமிழில் ஹைக்கூ படைத்து வரும் கவிஞர்களுக்கு ஹைக்கூ பேரொளி விருது வழங்கப்பட இருக்கிறது.
மதுரையில் சிறப்பாக நடைபெற்ற மூன்றாவது தமிழ் ஹைக்கூ மாநாடு
320
previous post