Sunday, June 16, 2024
Home » 90 தொன் ‘இந்திய தயாரிப்பு’ மருத்துவ பொருட்கள் உட்பட, கியூபாவிற்கு இந்தியாவின் மனிதாபிமான உதவிகள்

90 தொன் ‘இந்திய தயாரிப்பு’ மருத்துவ பொருட்கள் உட்பட, கியூபாவிற்கு இந்தியாவின் மனிதாபிமான உதவிகள்

by Rizwan Segu Mohideen
June 10, 2024 9:27 pm 0 comment

கியூபாவிற்கு இந்தியா மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளது. இதில் சுமார் 90 தொன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துப் பொருட்கள் அடங்கும் என்று வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தப் உதவிப் பொருட்கள் குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த மருந்துப் பொருட்களின் வழங்கப்பட்டது தொடர்பில் இந்திய வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், இந்த மருத்துவ உதவிகளில் நாள்பட்ட தொற்று நோய் சிகிச்சைக்குத் தேவையான மாத்திரைகள், காப்ஸ்யூல்கள், சிரப்கள் மற்றும் ஊசி மருந்துகள் மற்றும் அத்தியாவசிய நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உற்பத்தி செய்யும் மூலப் பொருட்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் தளத்தில் “கியூபாவிற்கு இந்தியா மனிதாபிமான உதவியை அனுப்புகிறது. 90 தொன்கள் கொண்ட ஒன்பது ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்து மூலப் பொருட்கள் முந்த்ரா துறைமுகத்திலிருந்து கியூபாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.இவற்றைக் கொண்டு அத்தியாவசிய மருந்து வகைகளை உற்பத்தி செய்ய முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“உலகின் மருந்தகம்” என்ற இந்தியாவின் அந்தஸ்தை இந்த உதவி மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்பதோடு கியூபாவுடனான வரலாற்று நட்புறவுக்கான நமது உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்தியா-கியூபா இடையிலான உறவு பாரம்பரியமாக நீடிக்கும் நட்புரீதியான உறவாகும். வெளியுறவு அமைச்சின் கூற்றுப்படி, 1959 புரட்சிக்குப் பிறகு கியூபாவுக்கு அங்கீகாரம் வழங்கிய முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.

ஐ.நா.வை ஜனநாயகப்படுத்துதல் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் இந்தியாவின் கருத்துக்களை கியூபா ஆதரித்து வருகிறது .

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT