Thursday, July 25, 2024
Home » T20 WC 2024: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

T20 WC 2024: பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா

- பும்ராவால் மொத்தமாக மாறிய ஆட்டம்

by Prashahini
June 10, 2024 9:12 am 0 comment

நடப்பு T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் ‘குரூப் – A’ பிரிவு ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் பாகிஸ்தான் அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது.

இந்தப் போட்டி நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுன்டி மைதானத்தில் நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். முதல் ஓவரை ஷாஹீன் ஷா அப்ரிடி வீசினார். அதில் 8 ஓட்டங்கள் எடுத்தார் ரோஹித் சர்மா.

அதன் பிறகு மழை குறுக்கிட்ட காரணத்தால் போட்டி சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. மழை நின்ற பிறகு ஆட்டம் தொடங்கியது. நசீம் ஷா வீசிய ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் கோலி 4 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 13 ஓட்டங்கள்எ டுத்த நிலையில் அடுத்த ஓவரில் ரோகித் ஆட்டமிழந்தார். அவரை அப்ரிடி வெளியேற்றினார்.

பின்னர் அக்சர் படேல் மற்றும் ரிஷப் பந்த் இணைந்து 39 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அக்சர் 20 ஓட்டங்கள் எடுத்த நிலையில் நசீம் ஷா வெளியேற்றினார். 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 81 ஓட்டங்கள் எடுத்தது.

அதன் பின்னர் சூர்யகுமார் யாதவ் 7 ஓட்டங்கள் ,ஷிவம் துபே ஓட்டங்கள் ,ரிஷப் பந்த் 42 ஓட்டங்கள் மற்றும் ரவீந்திர ஜடேஜா டக் அவுட் என 19 ஓவர்கள் முடிவில் 119 ஓட்டங்கள் எடுத்து இந்தியா சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

120 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக அணியின் கேப்டன் பாபர் அஸம் மற்றும் முஹம்மது ரிஸ்வான் இறங்கினர்.

இதில் பாபர் அஸம் 4ஆவது ஓவரில் சூர்யகுமாரிடம் கேட்ச் கொடுத்து 13 ஓட்டங்களில் நடையை கட்டினார். ரிஸ்வான் 44 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்து ஸ்கோரை ஏற்றினார். பின்னர் 14ஆவது ஓவரில் பும்ரா வீசிய பந்தில் அவுட் ஆனார்.

அடுத்து இறங்கிய உஸ்மான் கான், ஃபகார் ஜமான் தலா 13 ஓட்டங்கள், ஷதாப் கான் 4 ஓட்டங்கள், இஃப்திகார் அஹமத் 5 ஓட்டங்கள், இமாத் வாசிம் 15 ஓட்டங்கள் எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணியால் 120 ஓட்டங்கள் இலக்கை எட்டமுடியவில்லை.

ஆட்டத்தின் முடிவில் அந்த அணி ஏழு விக்கெட்களுக்கு 113 ஓட்டங்களே எடுத்திருந்தது. இதனையடுத்து இந்திய அணி வெற்றி பெற்றது. ஜஸ்மித் பும்ரா மொத்தம் 3 விக்கெட்களை எடுத்திருந்தார்.

India  (20 ovs maximum)
BATTING R B M 4s 6s SR
c Haris Rauf b Shaheen Shah Afridi 13 12 15 1 1 108.33
c Usman Khan b Naseem Shah 4 3 7 1 0 133.33
c Babar Azam b Mohammad Amir 42 31 65 6 0 135.48
b Naseem Shah 20 18 26 2 1 111.11
c Mohammad Amir b Haris Rauf 7 8 16 1 0 87.50
c & b Naseem Shah 3 9 7 0 0 33.33
c Iftikhar Ahmed b Haris Rauf 7 12 24 1 0 58.33
c Imad Wasim b Mohammad Amir 0 1 1 0 0 0.00
run out (Babar Azam/†Mohammad Rizwan) 9 13 26 1 0 69.23
c Imad Wasim b Haris Rauf 0 1 1 0 0 0.00
not out 7 7 7 0 0 100.00
Extras (lb 1, nb 1, w 5) 7
TOTAL 19 Ov (RR: 6.26) 119
Fall of wickets: 1-12 (Virat Kohli, 1.3 ov), 2-19 (Rohit Sharma, 2.4 ov), 3-58 (Axar Patel, 7.4 ov), 4-89 (Suryakumar Yadav, 11.2 ov), 5-95 (Shivam Dube, 13.2 ov), 6-96 (Rishabh Pant, 14.1 ov), 7-96 (Ravindra Jadeja, 14.2 ov), 8-112 (Hardik Pandya, 17.4 ov), 9-112 (Jasprit Bumrah, 17.5 ov), 10-119 (Arshdeep Singh, 18.6 ov) • DRS
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
4 0 29 1 7.25 14 1 2 1 0
4 0 21 3 5.25 15 3 0 1 1
4 0 23 2 5.75 15 3 0 0 0
1 0 7 0 7.00 3 1 0 1 0
3 0 17 0 5.66 6 1 0 1 0
3 0 21 3 7.00 10 4 0 0 0
Pakistan  (T: 120 runs from 20 ovs)
BATTING R B M 4s 6s SR
b Bumrah 31 44 67 1 1 70.45
c Yadav b Bumrah 13 10 23 2 0 130.00
lbw b Patel 13 15 23 1 0 86.66
c †Pant b Pandya 13 8 8 1 1 162.50
c †Pant b Arshdeep Singh 15 23 40 1 0 65.21
c †Pant b Pandya 4 7 10 0 0 57.14
c Arshdeep Singh b Bumrah 5 9 14 0 0 55.55
not out 0 1 4 0 0 0.00
not out 10 4 3 2 0 250.00
Extras (lb 4, nb 1, w 4) 9
TOTAL 20 Ov (RR: 5.65) 113/7
Did not bat: 

Fall of wickets: 1-26 (Babar Azam, 4.4 ov), 2-57 (Usman Khan, 10.1 ov), 3-73 (Fakhar Zaman, 12.2 ov), 4-80 (Mohammad Rizwan, 14.1 ov), 5-88 (Shadab Khan, 16.3 ov), 6-102 (Iftikhar Ahmed, 18.6 ov), 7-102 (Imad Wasim, 19.1 ov) • DRS
BOWLING O M R W ECON 0s 4s 6s WD NB
4 0 31 1 7.75 11 4 0 1 0
4 0 19 0 4.75 11 1 0 1 1
4 0 14 3 3.50 15 1 0 0 0
4 0 24 2 6.00 11 1 1 1 0
2 0 10 0 5.00 5 1 0 0 0
2 0 11 1 5.50 6 0 1 0 0

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT