Sunday, June 16, 2024
Home » பெண்ணின் வயிற்றிலிருந்து கொகெய்ன் உருண்டைகள் மீட்பு

பெண்ணின் வயிற்றிலிருந்து கொகெய்ன் உருண்டைகள் மீட்பு

by damith
June 10, 2024 10:30 am 0 comment

கொகெய்ன் ரக போதைப் பொருளை உருண்டைகளாக தயார் செய்து விழுங்கிய, உகண்டா பிரஜையொருவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

உகண்டா பிரஜையான இப்பெண் கொகெய்ன் போதைப் பொருளை விழுங்கி வயிற்றில் வைத்து, சூசகமாக நாட்டுக்கு எடுத்து வந்துள்ளதார். விமான நிலைய விசேட ஸ்கேன் இயந்திரமூலம் இது கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

31 வயதான இப்பெண், கொகெய்ன் போதைப்பொருளை விழுங்கியவாறு கட்டாரிலிருந்து நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.

சந்தேக நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இதன்பின்னர் 14 கொக்கெய்ன் உருண்டைகள் அவரது வயிற்றிலிருந்து வெளியே எடுக்கப்பட்டன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT