Sunday, June 16, 2024
Home » மணற்காட்டில் 31 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் கைது

மணற்காட்டில் 31 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் கைது

by Prashahini
June 9, 2024 9:47 am 0 comment

யாழ்ப்பாணத்தில் 31 கிலோ கேரளா கஞ்சாவுடன் இளைஞன் ஒருவர் இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமராட்சி மணற்காட்டு பகுதியில் கேரளா கஞ்சா பொதிகளை இளைஞன் ஒருவர் பதுக்கி வைப்பதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் , கஞ்சா பொதிகளுடன் இளைஞனை கைது செய்துள்ளனர்.

மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் 31 கிலோ நிறையுடையது எனவும் , கைது செய்யப்பட்ட இளைஞனையும் , மீட்கப்பட்ட கஞ்சாவையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக இராணுவ தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT