Sunday, June 16, 2024
Home » அணு ஏவுகணைத் திட்டத்தால் மேற்குலகை திரும்பிப் பார்க்க வைத்த ஆளுமைத் தலைவர்!
ஈரானின் புதிய ஜனாதிபதி முகமது மொக்பர்:

அணு ஏவுகணைத் திட்டத்தால் மேற்குலகை திரும்பிப் பார்க்க வைத்த ஆளுமைத் தலைவர்!

by gayan
June 8, 2024 7:52 am 0 comment

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலி​ெகாப்டர் விபத்தில் கொல்லப்பட்டதன் பின்னர், அயதுல்லா அலி கமேனியால், முகமது மொக்பர் (Mohammad Mokhber) இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

ஈரானில் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, 50 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அமைக்க வேண்டும். அதுவரை மொக்பர் இடைக்கால அதிபராக இருப்பார்.

ஈரானின் அணு மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்கள் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டதற்காக 2010 இல் ஐரோப்பிய ஒன்றியத்தால் பயணத்தடை விதிக்கப்பட்ட பட்டியலில் இவர் இருந்தார். ஆயினும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அவரின் பெயர் தடைப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.

துணைத்தலைவர்களில் மொக்பரின் பதவி முதன்மையானது. மறைந்த ஜனாதிபதி மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) போன்ற உச்ச தலைவரின் அலுவலகத்துடன் அவருக்கு வலுவான தொடர்பு இருந்ததால் அவர் முக்கியமானவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அத்துடன் அவர் நிர்வாகத்தில் நீண்டகால அனுபவத்துடன் செயல்பட்ட ஆளுமை மிக்கவராகவும் காணப்பட்டார்.

தற்போது அமெரிக்காவை அச்சுறுத்தும் ஈரானின் அணுசக்தி என்பது பல ஆராய்ச்சித் தளங்கள், இரண்டு யுரேனியம் சுரங்கங்கள், ஒரு ஆராய்ச்சி அணு உலை மற்றும் மூன்று அறியப்பட்ட யுரேனிய செறிவூட்டல் நிலையங்கள் உள்ளிட்ட யுரேனியம் செயலாக்க வசதிகள் ஆகியவற்றை கொண்டது ஆகும்.

யார் இந்த முகமது மொக்பர்?

செப்டம்பர் 1, 1955 இல் பிறந்த முகமது மொக்பர் நாட்டின் உச்ச தலைவர் அலி கமேனியுடன் நெருங்கிய தொடர்பில் எப்போதும் இருந்ததுடன், அரசியல் அனுபவமிக்கவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மறைந்த இப்ராஹிம் ரைசி ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு முகமது மொக்பர் 2021 ஆம் ஆண்டு முதல் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். அத்துடன் முகமது மொக்பர் ரஷ்யாவுடன் பல முக்கிய பேச்சுவார்த்தைகளுக்கு தலைமை தாங்கியுள்ளார்.

1979 இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு கைவிடப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும், முதன்மை தலைவருடன் இணைந்த முதலீட்டு நிதியமான Setad நிறுவனத்திற்கு முகமது மொக்பர் தலைமை தாங்கினார்.

அதேவேளை முகமது மொக்பர், 2013இல் அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை ஆகியவற்றில் ஈடுபட்டதாக கூறி ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) தடைகளை எதிர்கொண்டார். ஆனால் பின்னர் 2012 ஆம் ஆண்டு இந்த பட்டியலில் இருந்து முகமது மொக்பர் நீக்கப்பட்டார்.

தென்மேற்கு மாகாணமான குசேயிஷ்தான் இல் உள்ள டீயிஷவுள் இல் பிறந்த 68 வயதான இவர் மின்பொறியியலில் கல்வி கற்று, சர்வதேச PhD பட்டமும் பெற்றவர். அவர் தனது வாழ்க்கையின் தொடக்கத்தில் வங்கி மற்றும் தகவல்தொடர்புகளில் தீவிரமாக இருந்தார். குசேயிஷ்தான் தொலைத்தொடர்பு ஆணையத்தின் தலைவராக செயல்பட்டார். பின்னர் 1990 களில் மாகாணத்தின் துணை ஆளுநராக பதவி உயர்வு பெற்றார்.

ஓகஸ்ட் 2021 இல் ரைசியால் முதல் துணைத் தலைவராக மொக்பர் நியமிக்கப்பட்டார். துணைத்தலைவராக, மொக்பர் பல்வேறு அரசாங்க வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைப்பதற்காக ஈரான் நாடு முழுவதும் பயணம் செய்தார். ஆயுத பரிமாற்றம் குறித்து ஆலோசிப்பதற்காக மூத்த இராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவர் ரஷ்யாவுக்கு சென்றிருந்தார்.

துணை ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்பு, மொக்பர் ஈரானின் செட்டாட் அல்லது இமாம் கொமேனியின் உத்தரவை நிறைவேற்றுவதற்கான தொண்டு அமைப்பின் தலைவராக 14 ஆண்டுகள் பணியாற்றினார். கொவிட்-19 இன் தொடக்கத்தின் போது, மத்திய கிழக்கில் தொற்றுநோயால் ஈரான் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில், மொக்பர் செட்டாட்டின் தலைவராக இருந்தார். உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, கிட்டத்தட்ட 150,000 பேர் ஈரானில் கொவிட் நோயால் இறந்தனர்.

அவரது கண்காணிப்பின் கீழ், செட்டாட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட முக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசியான COVIran Barekat ஐ உருவாக்கியதில் முன்னின்றவர்.

–ஐங்கரன் விக்கினேஸ்வரா…?

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT